செய்திகள்

பாலிவுட்டில் சாய் பல்லவி..! ஏக் தின் படத்தின் டீசர் வெளியீடு!

நடிகை சாய் பல்லவியின் ஏக் தின் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ஆமிர் கான் தயாரிப்பில் நடிகை சாய் பல்லவி நடிக்கும் “ஏக் தின்” எனும் பாலிவுட் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளின் திரையுலகின் முன்னணி நடிகையான சாய் பல்லவி, நடிகர் ஆமிர் கான் தயாரிப்பில் உருவாகும் “ஏக் தின்” எனும் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகின்றார்.

இயக்குநர் சுனில் பாண்டே இயக்கும் இந்தப் புதிய திரைப்படத்தில் ஜுனைத் கான் நாயகனாக நடிக்கின்றார். மேலும், இப்படத்துக்கு இசையமைப்பாளர் ராம் சம்பத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை சாய் பல்லவியின் “ஏக் தின்” திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று (ஜன. 16) வெளியிட்டுள்ளனர். இப்படம் வரும் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றது.

முன்னதாக, பாலிவுட்டில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணா திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி “சீதை” கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

The teaser for the Bollywood film "Ek Din," produced by actor Aamir Khan and starring actress Sai Pallavi, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல்: ஒரே குடும்பத்தில் 3 கட்சிகள் சார்பில் 3 வேட்பாளர்கள் - அனைவரும் வெற்றி!

மக்களவை விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வா்மா மனு தள்ளுபடி!

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 687.19 பில்லியன் டாலராக உயா்வு!

அவமானம் - ஆட்ட நாயகி... ஒரே நாளில் மாறிய ஹர்லீன் தியோல் வாழ்க்கை!

பொங்கல் பண்டிகை! கன்னியாகுமரியில் படகு சேவை நேரம் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT