ஜீவா  
செய்திகள்

சர்ச்சையில் ஜீவா!

ஜீவாவின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ஜீவா பேசிய வசனம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நடிகர் ஜீவா நடிப்பில் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்த திரைப்படமான தலைவர் தம்பி தலைமையில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிப்படமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வணிக ரீதியாகவும் இதுவரை ரூ. 15 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தோல்விப்படங்களால் மார்க்கெட் இழந்து நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்த ஜீவாவுக்கு திருப்புமுனை படமாகவே இது அமைந்துள்ளதாக அவரின் ரசிகர்கள் கருதுகின்றனர்.

அதேநேரம், படத்தில் இடம்பெற்ற, ‘கண்டிஷன்ஸை பாலோ பண்ணுங்கடா’ என்கிற வசனத்தை புரமோஷனுக்காக திரையரங்கம் ஒன்றில் ஜீவா பேசியது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரணம், கரூர் பலியின் போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ‘படிச்சு படிச்சு சொன்னோம். கண்டிஷன்ஸை பாலோ பண்ணுங்கடான்னு’ என வருத்தமாகக் கூறியிருந்தார். ஆனால், அது சமூக வலைதளங்களில் கேலி, கிண்டலாக மாறியது.

இந்த வசனத்தை வைத்து பல மீம்களும், ரீல்ஸ்களும் உருவாக்கப்பட்டு கடந்தாண்டின் வைரல்களில் இணைந்தது.

என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கரூரில் நடந்த அந்த துயர நிகழ்வுக்காக ஒருவர் தன் மனதில் பட்டதைப் பேசியதை டிரெண்ட் ஆக்கி அதனைக் கேலியாக திரைப்படத்தில் வசனமாக வைத்ததும் இல்லாமல் புரமோஷனுக்கு ஜீவா போன்ற நடிகர் பேசியது முகம் சுளிக்க வைக்கிறது என ஜீவாவைக் கடுமையாக சிலர் விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஜீவா என்ன சொல்லப்போகிறார்? என பலரும் காத்திருக்கின்றனர்!

actor jiiva's thalaivar thambi thalaimayil movie dialogue has in controvercy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1 மணி நேரம் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடர்!

கவனம் ஈர்க்கும் பூக்கி புரோமோ!

25-வது நாளாகத் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்!

Untitled Jan 19, 2026 04:27 pm

கரூா் பலி: விசாரணைக்கு மீண்டும் ஆஜரான Vijay!

SCROLL FOR NEXT