தேசிய விருது உறுதி... விமர்சிக்கப்படும் தி கேரளா ஸ்டோரி - 2 டிரைலர்!
கேரளா ஸ்டோரி - 2 டிரைலர்....
சர்ச்சையைக் கிளப்பிய கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படம் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது. இதில், கேரளத்தைச் சோ்ந்த 32,000 ஹிந்துப் பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
வெளியானபோதே பல சர்ச்சைகளைக் கிளப்பியதுடன் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான திரைப்படமாக உள்ளதாக விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், வணிக ரீதியாக வெற்றிப்படமானது.
Advertisement
Advertisement
தற்போது, இதன் இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கமக்யா நாராயண் சிங் இயக்கியுள்ள இதனை விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்துள்ளார்.
முதல் பாகத்தினைப் போலவே டிரைலரில் சர்ச்சையான வசனங்கள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக, ஹிந்துப் பெண்களை இஸ்லாமியர்களாக மாற்றுவது தொடர்பான வசனங்களும் கட்டாயப்படுத்தி ஹிந்துப் பெண்ணை மாட்டுக்கறி சாப்பிட வைப்பதும் இதில் பதிவாகியுள்ளன. இதனைப் பலரும் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர்.
மத ரீதியான சர்ச்சைகளுடன் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு மட்டும் தணிக்கை வாரியம் சான்றிதழ் கொடுக்கும் என்றும் கண்டிப்பாக தேசிய விருதுகள் கிடைக்கும் என்றும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.