FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சர்ச்சையைக் கிளப்பும் சிஎம் 2031 கார் பதிவெண்! திருமாவளவனுக்கு சிக்கலா?

சர்ச்சையைக் கிளப்பும் சிஎம் 2031 கார் பதிவெண்ணால் திருமாவளவனுக்கு சிக்கலா? என்பது பற்றி...

21 செப்டம்பர் 2026, 1:33 pm IST
பகிர்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பயணம் செய்து வந்த டிஎன் சிஎம் 2031 என்ற பதிவெண் கொண்ட கார் எண் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தயிருக்கிறது.

தொல். திருமாவளவன் வந்த கார் எண், தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்பதை வலியுறுத்துவதாக இருந்தது. தவெக ஆட்சியில் கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அடுத்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் என்று மக்களிடையே வெளிப்படுத்துவது போல இருந்தது பேசுபொருளாகியிருந்தது.

இந்த நிலையில், அவர் வந்த கார் எண்ணே அல்ல, அது இரு சக்கர வாகனத்தின் எண் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்திட்டு வருகிறார்கள்.

Advertisement

Advertisement

இந்த எண் இருசக்கர வாகனத்தின் பதிவு எண் என்றும், அந்த வாகனம் 2018ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. எம் பரிவாகன் செயலியில் இதனை எவர் ஒருவரும் உறுதி செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த கார் திருமாவளவனுக்குச் சொந்தமானது அல்ல, அவருடன் வந்த ஆதரவாளருடையதுதான், ஒருவேளை, அந்த கார் எண் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டது என்பது தெரிய வந்தால் ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

சென்னை, பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள வந்த தொல். திருமாவளவன், டெஸ்லா கார் எண் "TN 07 CM 2031" இருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

பேரவைத் தேர்தலில் விசிக 2 தொகுதிகளில் வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையுடன் வென்ற தவெக ஆட்சிக்கு ஆதரவளித்து, பிறகு அமைச்சரவையிலும் அங்கம் வகித்து வருகிறது. இடைத்தேர்தலில் தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் விசிக இணைந்துள்ளது.

இந்த நிலையில், 2031ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வர் என்ற கொள்கையை அல்லது நிலைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக காரில் வந்திருப்பது பேசுபொருளான நிலையில், அந்த எண்ணே இப்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments