‘பறக்கும் மின்சார கார்’ அறிமுகம்.. டெஸ்லா பங்குகள் கிடுகிடு உயர்வு!
‘பறக்கும் மின்சார கார்’ அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெஸ்லா பங்குகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதைப் பற்றி...
‘பறக்கும் மின்சார கார்’ அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெஸ்லா பங்குகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளன.
உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் மின்சார கார்களைத் தயாரித்து வருகிறது. உலகின் முன்னணி ராக்கெட் தயாரிப்பு, ஸ்டார்லிங்க் இணைய வசதி, எக்ஸ் சமூக வலைதளம் என்று உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் எலான் மஸ்க், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் அடுத்த தலைமுறை ரோட்ஸ்டர் கார் நிகழ்ச்சியில் பறக்கும் மின்சார காரை அறிமுகம் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில், ராக்கெட் போன்ற த்ரஸ்டர்களுடன் கூடிய பறக்கும் காரை டெஸ்லா அறிமுகப்படுத்தியுள்ளது. 600 லிட்டர் அழுத்தப்பட்ட நைட்ரஜன் மூலம் 10 த்ரஸ்டர்கள் உதவியுடன் பறந்த கார், பாதுகாப்பாக தரையிறங்கியது.
Advertisement
Advertisement
இந்த புதிய ரோட்ஸ்டர் கார் கடந்த 2017-ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் இதன் தயாரிப்பு தள்ளிப்போன நிலையில், 2028 முதல் உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதிய ரோட்ஸ்டரின் விலை எவ்வளவு என்பதை டெஸ்லா கூறவில்லை என்றாலும், அதன் விலை 2,50,000 டாலர்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், டெஸ்லாவின் பறக்கும் மின்சார காரின் சோதனை வெற்றி பெற்றதால், டெஸ்லாவின் பங்குகள் 5.4 சதவிகிதம் வரை உயர்ந்தன. 360 டாலர்களில் விற்பனை ஆகிக் கொண்டிருந்த 382 டாலர்கள் வரை உயர்ந்தன.
Tesla shares rose 4% after the company unveiled a redesigned Roadster featuring SpaceX-developed thrusters. A livestreamed demonstration showed the driverless car perform a mid-air barrel roll.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.