ரன்வீர் சிங் நடித்த துரந்தர் - 2 திரைப்படத்தின் டீசர் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆதித்யா தார் இயக்கத்தில் கடந்த டிசம்பரில் வெளியான துரந்தர் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1300 கோடிகளைத் தாண்டி வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
பான் இந்திய மொழிகளில் வெளியாகாமல் ஹிந்தியில் மட்டும் திரைக்கு வந்து இந்த இமாலய சாதனையைச் செய்தது இந்திய திரைத்துறையினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இதன் இரண்டாம் பாகம் வருகிற மார்ச் மாதம் பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள நிலையில், துரந்தர் - 2 டீசரை தயாரிப்பு நிறுவனம் தயாராக வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 நிமிடம் 48 விநாடிகள் கொண்ட இந்த டீசர் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு பின் யூடியூபில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.