நடிகை ஹிமா பிந்து பிரதான பாத்திரத்தில் நடிக்கும் புதிய தொடர் ஒரு மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
நடிகை ஹிமா பிந்து மற்றும் ஜீவிதா ஆகியோர் இணைந்து இரு மலர்கள் என்ற தொடரில் நடிக்கிறார்கள். இத்தொடருக்கு இரு மலர்கள் எனப் பெயரிடப்படுள்ளது.
இத்தொடரின் நாயகனாக நடிகர் சந்தோஷ் நடிக்கிறார். இரு நாயகிகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
நண்பர்களான ஹிமா பிந்து, ஜீவிதா மற்றும் நாயகனான சந்தோஷ் இருவர்களுக்கிடையே நடக்கும் நிகழ்வுகளை பிரதானப்படுத்தி இரு மலர்கள் தொடர் எடுக்கப்படுகிறது.
5 ஆண் நண்பர்களுடனான பெண்ணின் நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ரஞ்சனி தொடரில் ஜீவிதா மற்றும் சந்தோஷ் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இவர்கள் இருவரும் மீண்டும் இருமலர்கள் தொடரில் இணைந்துள்ளனர்.
இரு மலர்கள் தொடர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தத் தொடர் கடந்த ஜன. 19 ஆம் தேதி தொடங்கப்பட்டு 3 நாள்களே ஆன நிலையில், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.