1 மணி நேரம் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடர்!
சிறகடிக்க ஆசை தொடர் 1 மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ளது தொடர்பாக...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் இன்று முதல் 1 மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ளது.
அதிகம் டிஆர்பி புள்ளிகளைப் பெற்று, இல்லத்தரசிகள் மட்டுமின்றி அனைத்து தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கும் தொடராக சிறகடிக்க ஆசை உள்ளது.
கூட்டு குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளை மையப்படுத்தி நகைச்சுவை கலந்து விறுவிறுப்புடன் இத்தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
விகடன் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் தொடரை எஸ். குமரன் இயக்கி வருகிறார். இத்தொடரில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, இயக்குநர் ஆர். சுந்தரராஜன், அனிலா ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
கடந்த 2023 ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை தொடர் 850 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
சிறகடிக்க ஆசை தொடர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு முக்கியத்துவம் பெறும் (Prime Time) நேரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று நிறைவடைந்த நிலையில் இன்று(ஜன. 19) முதல் இரவு 9 மணி முதல் 10 மணி வரை 1 மணி நேரம் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறகடிக்க ஆசை தொடர் 1 மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ளது, இந்தத் தொடரை விருப்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The series 'Siragadikka Aasai', which is being broadcast on Vijay TV, has crossed 850 episodes.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.