FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

2 மணி நேரம் ஒளிபரப்பாகும் மூன்று தொடர்கள்!

சிங்கப் பெண்ணே, மூன்று முடிச்சு, மருமகள் ஆகிய மூன்று தொடர்களின் மகா சங்கமம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

சிங்கப் பெண்ணே, மூன்று முடிச்சு, மருமகள் தொடர்களின் மகா சங்கமம் - இன்ஸ்டாகிராம்
பகிர்:

சிங்கப் பெண்ணே, மூன்று முடிச்சு, மருமகள் ஆகிய மூன்று தொடர்களின் மகா சங்கமம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடரின் மகா சங்கமம் இரவு 8 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகவுள்ளது. இதனால் இந்த மூன்று தொடர்களும் 2 மணிநேரம் ஒளிபரப்பாகவுள்ளன.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவை. சின்ன திரை டிஆர்பி புள்ளிப் பட்டியலிலும் சன் தொலைக்காட்சியின் தொடர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

அந்தவகையில் டிஆர்பி புள்ளிப் பட்டியலில் முதன்மை இடங்களில் இருக்கும் சிங்கப் பெண்ணே, மூன்று முடிச்சு, மருமகள் ஆகிய மூன்று தொடர்களின் மகா சங்கமம் அக். 12 ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது.

Advertisement

Advertisement

இரவு 8 மணி முதல் 10 மணி வரை இரண்டு மணிநேரத்துக்கு தொடர்ந்து ஒளிபரப்பாகவுள்ளது. இதனால் இந்த மெகா சங்கமம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

மகா சங்கமத்தின் மூலம் ஏதேனும் ஒரு தொடரை பார்க்காத நபர்களும் இனி கவர்ந்திழுக்கப்பட்டு பார்க்கத் தொடங்குவார்கள் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மூன்று தொடர்களின் நடிகர், நடிகைகளுமே சேர்ந்து நடிக்கின்றனர்.

இதனால் மருமகள் தொடரின் கேப்ரியல்லா, சிங்கப் பெண்ணே தொடரின் மணிஷா, மூன்று முடிச்சு தொடரின் ஸ்வாதி ஆகியோரை ஒன்றாக திரையில் கான அவர்களின் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு உள்ளனர்.

இதுவரை இரண்டு தொடர்கள் இணைந்து மகாசங்கமம் ஒளிபரப்பாகிவந்த நிலையில், இம்முறை மூன்று தொடர்களின் மகாசங்கமம் ஒளிபரப்பாகவுள்ளது.

summary

Singa penne moondru mudichu marumagal Three serials with a two-hour runtime

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments