மங்காத்தா திரைப்படம் மறுவெளியீட்டில் வசூல் சாதனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “மங்காத்தா”.
அஜித்தின் 50-வது படமான இது அன்றே ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அஜித்தின் முதல் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
தற்போது, இப்படத்தை நாளை மறுநாள் (ஜன. 23) மறுவெளியீடு செய்யவுள்ளனர்.
ஆன்லைன் முன்பதிவு வாயிலாகவே 1 லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், விஜய்யின் கில்லி, ரஜினியின் படையப்பா திரைப்படங்கள் மறுவெளியீட்டிலும் வசூலைக் குவித்தது போல், மங்காத்தா திரைப்படமும் நல்ல வசூலை ஈட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.