ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு, எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில் திரைக்கு வந்த சிறை திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தப் படம் நாளை(ஜன. 23) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இயக்குநர் விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் வெளியான திரைப்படம் மார்க்.
கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி அதிரடியான ஆக்சன் திரைப்படமாக வெளியான மார்க் திரைப்படம், நாளை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.
நடிகர் தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் நேரடியாக ஹிந்தியில் உருவான தேரே இஷ்க் மெய்ன் திரைப்படத்தை ஆனந்த் எல். ராய் இயக்கியிருந்தார்.
இந்தத் திரைப்படம் நாளை(ஜன. 23) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
நடிகர் அருண் விஜய்யின் ரெட்ட தல திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கிரிஸ் திருக்குமரன் இயக்கிய இப்படத்தில் நாயகிகளாக சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.
நடிகை சோபிதா துலிபாலா பிரதான பாத்திரத்தில் நடித்த தெலுங்கு மொழிப்படமான சீக்காடி லோ திரைப்படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
கிரைம் திரில்லர் பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் நடிகர் புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளியான ‘45’ என்ற கன்னட மொழிப்படம் நாளை ஜீ5 தளத்தில் வெளியாகிறது.
மேலும், இந்தப் படத்தில் உபேந்திரா மற்றும் ராஜ் பி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தன்ஞ்சய் சங்கர் இயக்கத்தில் மோகன்லால், திலீப், சாண்டி மாஸ்டர், எஸ்.ஜே. சூர்யா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மலையாள மொழித்திரைப்படம் பா பா பா.
இந்தப் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் இயக்குநர் ஜிதின் கே.ஜோஷ் இயக்கத்தில் கடந்த டிச.5 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான திரைப்படம் களம்காவல்.
இந்தப் படத்தில் விநாயகன், மம்மூட்டி பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஜோஷ் இயக்கத்தில் விஜயராகவன், சலீம் குமார், கனி குஸ்ருதி, மீரா வாசுதேவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கிர்க்கன் படத்தை, சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
உண்மைச் சம்பவத்தை வைத்து கிரைம் கலந்த திரில்லர் பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
மலைவாழ் மக்களின் உணர்வுகளை மையப்படுத்தி தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் விமல், ஸ்ருஷ்டி டாங்கே பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் மகாசேனா.
இந்தத் திரைப்படம் ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அபிராமி, ஜெகபதி பாபு, ஒய். ஜி. மகேந்திரா ஆகியோர் நடித்துள்ள அனந்தா திரைப்படம், சாய்பாபாவைப் பற்றிய ஆன்மிகப் படமாக எடுக்கப்பட்டுள்ளது.
நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அனந்தா திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.