பிரபல பாடகி ஜானகியின் மகன் மாரடைப்பால் காலமானார்.
திரைத்துறையில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர் ஜானகி. கடந்த 50 ஆண்டுகளாக பல இசையமைப்பாளர்கள் இசையில் பல்வேறு மொழிகளில் பாடி தேசியளவில் விருதுகளை வென்றுள்ளார். ஜானகிக்கு, முரளி கிருஷ்ணா என்கிற மகன் இருந்தார்.
சில திரைப்படங்களில் நடித்துள்ள முரளி கிருஷ்ணா சென்னையைச் சேர்ந்த நடன கலைஞர் உமாவை மணந்து, பின் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் தன் தாய் ஜானகியுடன் வசித்து வந்த முரளி கிருஷ்ணா, இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு ரசிகர்கள், திரைத்துறையினர் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
முரளி கிருஷ்ணா தெலுங்கு சினிமாவில் நடித்து வந்தார். விநாயகடு, 100% காதல் ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.