சர்வம் மாயா படத்தின் போஸ்டர்.  படம்: எக்ஸ் / ஜியோ ஸ்டார் மலையாளம்.
செய்திகள்

ஓடிடியில் சர்வம் மாயா..! 7 மொழிகளில் ரிலீஸ்!

நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவான சர்வம் மாயா படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவான சர்வம் மாயா திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் வரும் ஜன.30 ஆம் தேதி ஜியோ ஸ்டார் ஓடிடியில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள இயக்குநர் அகில் சத்யன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவான இந்தப் படம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

சமீப காலமாக வெற்றிப் படங்கள் இல்லாமலிருந்த நிவின் பாலிக்கு கம்பேக் திரைப்படமாக சர்வம் மாயா அமைந்திருந்தது.

முக்கிய கதாபாத்திரத்தில் அஜு வர்கீஸ், ரியா ஷிபு நடித்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, மராத்தி ஆகிய 7 மொழிகளில் ஓடிடியில் வெளியாகிறது.

நிவின் நடித்து முடித்துள்ள டியர் ஸ்டூடன்ட்ஸ், பென்ஸ் ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

தற்போது, நிவின் நடித்துள்ள பேபி கேர்ள் எனும் புதிய திரைப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது.

த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கும் கேரளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றுள்ளதால் நிவின் பாலி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸுபீன் கர்க் மரண வழக்கு: விசாரணைக்காக பிரதமருக்கு குடும்பத்தினர் கடிதம்

பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

2-வது ஒருநாள்: இலங்கை அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

ஒரே மேடையில் சுனிதா வில்லியம்ஸ் - பாவனா! இலக்கியத் திருவிழாவில் சுவாரசியம்!

காலாண்டு வருவாய் அறிவிப்புக்குப் பிறகு ரிலையன்ஸ் 3% சரிவு!

SCROLL FOR NEXT