சர்வம் மாயா படத்தின் போஸ்டர். படம்: இன்ஸ்டா / ஃபயர் ஃபிளை பிலிம்ஸ்
செய்திகள்

சர்வம் மாயா ரூ.125 கோடி வசூல்! ஓடிடியில் எப்போது?

வசூலில் அசத்தும் சர்வம் மாயா திரைப்படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

மலையாள நடிகர் நிவின் பாலியின் சர்வம் மாயா திரைப்படம் ரூ.125 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இயக்குநர் அகில் சத்யன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் அஜு வர்கீஸ், ரியா ஷிபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவான இந்தப் படம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

நீண்ட காலமாக வெற்றிப்படம் இல்லாமல் ஏமாற்றத்துடன் இருந்த நிவின் பாலிக்கு கம்பேக்-ஆக சர்வம் மாயா திரைப்படம் அமைந்துள்ளது.

நிவின் நடிப்பில் உருவாகியுள்ள டியர் ஸ்டூடன்ட்ஸ், பென்ஸ் ஆகிய திரைப்படங்கள் இந்தாண்டு வெளியாகவுள்ளன.

இந்தப் படம் பிப்ரவரிக்கு முன்பாக ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகுமென தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன.

After dominating the theatrical space with sold-out shows and repeat viewing, Sarvam Maya is all set to release in the OTT space.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருகிராம்: காவல் துறை வாகனத்தில் இருந்து கைது தப்பியோட்டம்!

சாலை விபத்து வழக்கில் தண்டனை பெற்ற முதியவா் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை!

7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

கூலித் தொழிலாளி மா்ம மரணம்

இதுவரை 1.86 கோடி குடும்பங்களுக்கு ரூ.3,000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு!

SCROLL FOR NEXT