புது வசந்தம் தொடரில், நடிகை அக்ஷயா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
ஆஹா கல்யாணம் தொடரில் நாயகியாக நடித்த இவர், அம்மன் தோற்றத்தில் நடிப்பதால், புது வசந்தம் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1.30 மணிக்கு புது வசந்தம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் சோனியா சுரேஷ் நாயகியாகவும் இவருக்கு ஜோடியாக நடிகர் ஷியாம் ஜி நடித்து வருகிறார்.
பகல் நேரத்தில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் அதிக ரசிகர்களைப் பெற்ற தொடராக உள்ள புது வசந்தம், மேலும் ரசிகர்களைக் கவரும் வகையில் பல புதிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
அந்தவகையில் நடிகை அக்ஷயா இத்தொடரில் அம்மனாக சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடம் வரவேற்பை பெற்ற ஆஹா கல்யாணம் தொடரில் நாயகியாக நடித்தவர்.
இவர் பகலறியான் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து மின்மினி படத்திலும் நடித்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
தற்போது புது வசந்தம் தொடரில் அக்ஷயா நடிப்பதால், இத்தொடரின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பான முன்னோட்ட விடியோவும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் அம்மன் வேடமிட்டு எடுக்கப்பட்ட காட்சிகளையும் நடிகை அக்ஷயா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு உதவி இயக்குநர் ஜெய்னுவை அக்ஷயா திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு தற்போது மீண்டும் சின்ன திரையில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.