ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் சின்ன திரை தொடர்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம் இரவு 8 மணி முதல் 10 மணி வரை தொடர்ந்து முக்கியமான தொடர்கள் இருக்கும் வகையில் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இல்லத்தரசிகளை மட்டுமின்றி பலதரப்பட்ட ரசிகர்களைக் கவரும் வகையிலான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. சமீபத்தில் சில புதிய தொடர்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே முக்கியத் தொடர்களின் ஒளிபரப்பு நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பாரிஜாதம் - அயலி தொடர்களின் மகா சங்கமம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
கார்த்திக் ராஜ் நாயகனாக நடித்துவரும் கார்த்திகை தீபம் தொடர் திங்கள் - சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
இர்ஃபான் - பவித்ரா அரவிந்த் முதன்மை பாத்திரங்களில் நடித்து வரும், வாகை சூட வா தொடர் திங்கள் - சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நேர மாற்றங்கள் இன்று (ஜன. 26) முதல் அமலுக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.