பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் அனிமல் திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாகுமெனக் கூறியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
அனிமல் பார்க் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்குமென ரன்பீர் கபூர் கூறியுள்ளார்.
சந்தீப் வங்கா இயக்கிய அனிமல் திரைப்படம் இந்திய அளவில் ரூ.900 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
சமூக வலைதளத்தில் சிலர் இந்தப் படத்தை ஆணாதிக்கம் மிகுந்தது என விமர்சித்தனர்.
இந்தப் படத்தில் ரஷ்மிகா மந்தனா, திரிப்தி டிம்ரி, பாபி தியோல், அனில் கபூர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் மூன்று பாகம் உருவாகுமெனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் ரன்பீர் கபூர் கூறியிருப்பதாவது:
தற்போது, சந்தீப் ஸ்பிரிட் படத்தை இயக்கி வருகிறார். 2027-ல் அனிமல் பார்க் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவோம். அதற்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது.
மூன்று பாகங்களாக எடுக்க சந்தீப் விரும்புகிறார். இரண்டாம் பாகத்திற்கு அனிமல் பார்க் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கதையை எப்படி முன்னகரத்துவது என நாங்கள் முதல் பாகத்திலிருந்தே பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளோம். நாயகனாகவும் வில்லனகாவும் நடிக்கவிருப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்.
மிகவும் அசலான இயக்குநர் படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.