தாய் கிழவி படத்தில் ராதிகா சரத்குமார்.  படங்கள்: யூடியூப் / சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ்.
செய்திகள்

100 கிழவிகளின் மாதிரி... தாய் கிழவி படத்தில் ராதிகாவின் ஒப்பனை!

தாய் கிழவி படத்திற்காக நடிகை ராதிகாவின் ஒப்பனைக் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை ராதிகா சரத்குமார் தாழ் கிழவி படத்தில் நடிப்பதற்காக எப்படி எல்லாம் ஒப்பனை செய்ய உழைத்துள்ளார் என்பதை படக்குழு விடியோவாக வெளியிட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் கனா முதல் ஹவுஸ் மேட்ஸ் வரை இதுவரை 8 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

தற்போது, பேஸன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ் இணைந்து புதிய திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

தாய் கிழவி எனப் பெயரிட்ட இப்படத்தின் டீசர் கவனமீர்த்த நிலையில், இப்படம் வரும் பிப். 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்தப் படத்திற்காக மலையாளத்தில் இருந்து ஒப்பனைக் கலைஞர் வினீஷ் என்பவர் வரவழைத்து சிறப்பாக ஒப்பனை செய்யப்பட்டுள்ளது.

பவுனுத்தாயி எனும் கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது ஒப்பனைக்காக 100 கிழவிகளிடம் இருந்து சேகரித்த மாதிரிகளைக் காட்டி உருவாக்கியுள்ளார்கள்.

நடிகர் கமல்ஹாசனும் இதைப் பார்த்து மிகவும் சிறப்பாக செய்துள்ளார்கள் எனக் கூறியதாக நடிகை ராதிகா இந்த விடியோவில் கூறியுள்ளார்.

உசிலம்பட்டியில் இருக்கும் கிழவிகளின் நெத்திச் சுறுக்கம், முடியின் நிறம், மச்சம், தழும்பு, பல்லின் நிறம் என அனைத்தும் மாதிரிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக இயக்குநர் கூறியுள்ளார்.

The film crew has released a video showing the effort actress Radhika Sarathkumar put into her makeup for the movie 'Thaai Kizhavi'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”NDA கூட்டணியில் மேலும் சில கட்சிகள்”: டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் Exclusive

உலமாக்களுக்கான ஓய்வூதியம் உயர்வு..! புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் 3வது காலாண்டு வருவாய் உயர்வு!

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 10

அஜீத் பவாருக்கு நாளை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு! பிரதமர் மோடி பங்கேற்பு!

SCROLL FOR NEXT