சிறப்புக் காட்சியில் வரவேற்பைப் பெற்ற தாய் கிழவி..! பிரபலங்கள் பங்கேற்பு!
நடிகை ராதிகா சரத்குமாரின் தாய் கிழவி படத்தின் சிறப்புக் காட்சி குறித்து...
நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள தாய் கிழவி படத்தின் சிறப்புக் காட்சி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் தாய் கிழவி எனும் படத்தில் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்தப்படத்தில் வட்டிக்கு விடும் ’பவுன் தாய்’ எனும் கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருந்த டீசர் வெளியாகி பலரிடமும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
Advertisement
Advertisement
இப்படம் முதலில் பிப். 20 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டடு பின்னர், பிப். 27 ஆம் தேதி வெளியாகுமென தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில், நேற்றிரவு (பிப்.25) இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி வெளியாகி பலரிடமும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தக் காட்சிக்கு நடிகைகள் ஷாலினி, ஜோதிகா, நடிகர் சூர்யா வந்திருந்தார்கள்.
Suriya, Jyotika and Shalini attend Thaai Kizhavi premiere show, praise Radikaa Sarathkumar and Sivakarthikeyan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.