அஜித் - 64 திரைப்படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி?
அஜித் - 64 திரைப்படம் குறித்து...
நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி தயாரிப்பாளராகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. ஏகே - 64 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஆனால், குட் பேட் அக்லி வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஏகே - 64 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருப்பதால் உண்மையில் யார்தான் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்? என்கிற கேள்விகளும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
Advertisement
Advertisement
மேலும், நடிகர் அஜித் குமார் தரப்பிலிருந்து ரூ. 150 கோடிக்கும் அதிகமாக சம்பளம் கேட்டதால் எந்த தயாரிப்பாளர்களும் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என சிலர் கருத்தும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினி ஏகே - 64 திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷாலினியே முன்னின்று படப்பிடிப்பு பணிகளையும் கவனிப்பார் என்றும் தெரிகிறது.
Reports indicate that actor Ajith Kumar's wife, Shalini, has become a producer.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.