சேயோன் பந்தயம் அடிக்கும்..! தாய் கிழவி 100 நாள் விழாவில் சிவகார்த்திகேயன்!
நடிகை ராதிகாவின் தாய் கிழவி படத்தின் 100 நாள் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் பேசியிருப்பதாவது...
நடிகை ராதிகாவின் தாய் கிழவி படத்தின் 100 நாள் வெற்றிக் கொண்டாட்டத்தில் தயாரிப்பாளரும் நடிகருமான சிவகார்த்திகேயன் பங்கேற்று, “சேயோன் படம் நிச்சயமாக பந்தயம் அடிக்கும்” எனக் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகை ராதிகாவை மையமாக வைத்து அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் தாய் கிழவி என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் கடந்த பிப்.27ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் வெற்றிக்காக தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் இயக்குநருக்கு ஒரு காரை பரிசளித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்தப் படத்தின் 100 நாள் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்த விழாவில் நடிகை ராதிகாவுக்கு சிறப்புப் பதக்கம் வழங்கப்பட்டது. இதில் சிவகார்த்திகேயன் பேசியிருப்பதாவது:
தாய் கிழவி படத்தின் கதையைக் கேட்டதில் இருந்து அது நிச்சயமாக வெற்றிபெறும் எனத் தெரியும். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்குப் பிறகு தாய் கிழவி மீது அதிக நம்பிக்கை இருந்தது.
சேயோன் படத்தில் 20 நாள்கள் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் தெரிகிறது. தாய் கிழவி எப்படி ஹிட் அடித்தது என்று. இயக்குநர் மிகுந்த பொறுப்புடன் வேலை செய்கிறார். நான் கண்ணைக் கட்டிக்கொண்டு நடிக்க தயாராக இருக்கிறேன்.
இயக்குநர் எனக்கு தம்பி மாதிரி. அவர் நான் விதைநெல்லை கொடுத்திருப்பதாகவும் நல்ல விளைச்சல் வருமெனவும் கூறியுள்ளார். அண்ணனாக நான் உடன் நிற்பேன். நிச்சயமாக பந்தயம் அடிப்போம். கப் அடிப்போம் என சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியாகப் பேசினார்.
Thaai Kizhavi 100 celebration sivakarthikeyan says Pandhayam adippom in seyon film
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.