படத்தின் வெற்றியை கடவுளுக்குச் சமர்ப்பித்த ஜோதிகா!
சிஸ்டம் படத்தின் வெற்றியைக் கொண்டாடிய ஜோதிகா குறித்து...
நடிகை ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் நேரடியாக வெளியான ’சிஸ்டம்’ என்ற படத்தின் வெற்றியின் மகிழ்ச்சியில் கோயிலுக்குச் சென்றுள்ளார்.
அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் சிஸ்டம் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் மே.22ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தமிழில் நடிகையாக இருந்த ஜோதிகா தற்போது மும்பையில் தங்கி, ஹிந்தி திரைப்படங்கள், இணையத் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
Advertisement
Advertisement
தற்போது, சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா நடிப்பில் சிஸ்டம் படம் வெளியாகியுள்ளது. குவாஹாட்டியில் இருக்கும் கோயிலுக்குச் சென்று இந்தப் படத்தின் வெற்றி குறித்து நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:
எனக்குத் தெரியும் காரணம் அவள்தான்! காமக்யதேவியிடம் தொடங்கிய ‘சிஸ்டம்’ படத்தின் பயணம் இன்று மகாலக்ஷ்மியிடம் முடிவடைந்தது. படத்தின் வெற்றிக்கு ஆசிர்வாதம் பெற்றேன். தேவி அம்மா சக்தி எப்போதும் எங்களை முன்னேற்றுவாள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிகா பகிர்ந்த இந்தப் பதிவில் அவரது கணவர் சூர்யா, இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி உடன் இருந்துள்ளார்கள். சூர்யாவின் கருப்பு படமும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
Jyotika visits temple with Ashwiny Iyer Tiwari after System's success: 'May Devi Maa...'
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.