சமந்தாவின் ‘மா இண்டி பங்காரம்’ எந்த ஓடிடியில் வெளியாகிறது?
சமந்தாவின் ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி பற்றி....
சமந்தாவின் ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்த சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. பல வெற்றிப்படங்களில் நடித்தவர் பாலிவுட்டில் இணையத் தொடர்களில் நடித்து இந்தியளவில் கவனிக்கப்பட்டார். நடிகை சமந்தா நடிப்பில் கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியான படம்தான் 'மா இண்டி பங்காரம்'.
சமந்தா கணவர் ராஜ் நிதிமோர் உருவாக்கத்தில் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியிருந்தார். சமந்தாவுக்கு கோலிவுட்டிலும் மார்கெட் இருப்பதால் தமிழிலும் டப் செய்து 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் படம் வெளியிடப்பட்டது. அதேபோல் பாடத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
Advertisement
Advertisement
உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. அதிரடி ஆக்ஷன் மற்றும் குடும்பக் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் பட்ஜெட்டை விட 300% அதிகமான லாபத்தையும் ஈட்டித் தந்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samantha Ruth Prabhu's latest film Maa Inti Bangaaram is now ready for its next big milestone after a successful run in theatres.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.