ஊர்வசியின் ஆஷா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி!
நடிகை ஊர்வசி நடிப்பில் வெளியான ஆஷா படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...
நடிகை ஊர்வசி, நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியான சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ஆஷா படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் விநாயக ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சஃபர் சனல் இயக்கத்தில் உருவான ஆஷா திரைப்படம் செப்.11ஆம் தேதி திரையரக்குகளில் வெளியானது.
உளவியல் ரீதியாக உருவான இந்தப் படம் விமர்சன ரீதியாக மிகுந்த வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ஊர்வசியின் நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஊர்வசியின் மகளாக நடித்திருப்பார். மது நீலகண்டன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்ததாக ரசிகர்கள் பாராட்டி இருந்தார்கள்.
இந்தப் படம் வரும் அக்.16ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்திக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
உள்ளொழுக்கு திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை சமீபத்தில் ஊர்வசி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Aasha on OTT: When and where to watch Urvashi and Joju George's psychological drama
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.