FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஓடிடியில் டோரதி எப்போது?

டோரதி படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...

12 அக்டோபர் 2026, 1:43 pm IST
டோரதி படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ்
பகிர்:

டோரதி திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான டோரதி திரைப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisement

Advertisement

மதுரையைப் பின்னணியாகக் கொண்டு 1990-களில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்ட இந்தப் படம், டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது.

இந்தப் படத்தை, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்தப் படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை, கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது. கல்யாண விருந்து, முத்துமணி ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்த நிலையில், டோரதி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 23 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

summary

Information regarding the OTT release of the movie 'Dorothy' has been revealed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments