கிச்சா சுதீப்  
செய்திகள்

சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த கிச்சா சுதீப்!

சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த கிச்சா சுதீப்....

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் கிச்சா சுதீப் திரைத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் கிச்சா சுதீப் தன் அறிமுக திரைப்படங்களில் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் தமிழில் வெளியான சேது திரைப்படத்தைக் கன்னடத்திற்கு குச்சா என்கிற பெயரில் ரீமேக் செய்து நடித்து மிகுந்த பாராட்டுகளைப் பெற்றார்.

அதன்பின், நல்ல கதையசமுள்ள திரைப்படங்களில் நடித்தவர் தனக்கென வணிகத்தையும் ரசிகர்களையும் உருவாக்கினார்.

சுதீப்பின் நடிப்பில் குச்சா, நந்தி, கிச்சா, மை ஆட்டோகிராஃப் ஆகிய திரைப்படங்கள் முன்னணி கதாநாயகனாக அவரை மாற்றியது.

2012-ல் வெளியான நான் ஈ திரைப்படம் கன்னட நடிகராக இருந்த சுதீப்பை தென்னிந்தியளவில் பிரபலப்படுத்தியது. தற்போது, இவர் நடிக்கும் திரைப்படங்கள் பான் இந்திய வெளியீடாகவே திரைக்கு வருகின்றன. இறுதியாக, மேக்ஸ் என்கிற வெற்றிப்படத்தைக் கொடுத்தார். மார்க் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக வெற்றியை அடைந்தது.

ரசிகர் உருவாக்கிய போஸ்டர்

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பிக்பாஸ் தொகுப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட கிச்சா சுதீப் இன்றுடன் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

இதனை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருவதுடன் திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், கர்நாடக புல்டோசர்ஸ் நட்சத்திர கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். இன்று நடைபெற்று வரும் சென்னைக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தின் துவக்கத்தில் கிச்சா சுதீப்புக்கு கேக் வெட்டி சக நடிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்.17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

பட்ஜெட் தாக்கல்! ஏற்கெனவே ஜிஎஸ்டியால் மக்கள் சிரமம்: காங்கிரஸ்

மகாராஷ்டிரத்தின் துணை முதல்வராக பதவியேற்றார் சுனேத்ரா பவார்! | செய்திகள் : சில வரிகளில் | 31.1.26

“உலகக்கோப்பைதான் அடுத்த இலக்கு”: அர்ஜுனா விருதுபெற்ற துளசிமதி முருகேசன் நம்பிக்கை

தைப்பூசத் திருவிழா: அரக்கோணம் - திருத்தணி இடையே நாளை சிறப்பு ரயில்கள்

SCROLL FOR NEXT