பெத்தி: ராம் சரண் - ஸ்ருதி ஹாசன் பாடலின் புரோமோ விடியோ!
நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பெத்தி படத்தின் புரோமோ பாடல் குறித்து...
நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பெத்தி படத்தில் இருந்து புரோமோ பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. முழுமையான பாடல் மே.23ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடித்த பெத்தி திரைப்படம் பலமுறை வெளியீடு மாற்றியமைக்கப்பட்டு, வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் , சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் எடிட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததாகப் படக்குழு அறிவித்திருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் சிறப்பு நடனமாடியுள்ள பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. ஹெல்லல்லோ என்ற இந்தப் பாடல் மே.23ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்தப் பாடலுக்கு நடனமாட, நடிகை ஸ்ருதி ஹாசன் சுமார் ரூ.3 கோடி வாங்கியதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழில் இந்தப் பாடலுக்கு சிநேகன் பாடல் எழுத ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.