நியூஸ் ரீல்

ஜமுனா கதாபாத்திரத்தில் சமந்தா

DIN

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு "நடிகையர் திலகம்' என்ற பெயரில் தமிழில் உருவாகிறது. நாக் அஸ்வின் இயக்குகிறார். சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சமந்தா ஒப்புக் கொண்டார். கதாபாத்திரத்துக்காக உடல் எடையை ஏற்ற வேண்டும் என்ற நிபந்தனைக்காக அப்படத்திலிருந்து அவர் விலகினார். இதையடுத்து அந்த வேடத்துக்கு கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமானார். தனக்குப் பிடித்த நடிகை என்பதால், இதில் தானும் நடிக்க வேண்டும் என சமந்தா கேட்டுக் கொண்டார். இதை ஏற்ற இயக்குநர் சமந்தாவின் கதாபாத்திரத்தையும் கதையில் இணைத்தார். சாவித்திரி பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் அவருக்கு போட்டியாக களம் இறங்கியவர் ஜமுனா. இந்த கதாபாத்திரத்திரம்தான் சமந்தாவுக்கு என பேசப்பட்டு வந்தது. அதே சமயம் சாவித்திரியின் மார்க்கெட்டை முடிவுக்கு கொண்டு வந்தது சரோஜாதேவி என்று சொல்லப்படுகிறது. அவரது வரவுக்குப் பின்புதான் சாவித்திரிக்கு பட வாய்ப்புகள் மங்கின. அந்த கதாபாத்திரமும் படத்தில் முக்கியமாக இடம் பெறுகிறது. இந்த இரு கதாபாத்திரங்களும் கதையில் இடம் பெறுவதால், அதில் யாருடையை கதாபாத்திரத்தை ஏற்பது என்பதில் சமந்தா குழப்பத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

SCROLL FOR NEXT