நியூஸ் ரீல்

விஜய் சேதுபதி ஜோடியாக த்ரிஷா

DIN

"ரோமியோ ஜூலியட்',  "கத்திசண்டை', "வீரசிவாஜி' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த  மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் அடுத்த படமாக உருவாகி வரும் படம் "96'. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் பிரேம்குமார். "பசங்க', "சுந்தரபாண்டியன்', "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் மேனன் இசை.  படத்தொகுப்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார். கலை இயக்குநர் வினோத்குமார். உமா தேவி, கார்த்திக் நேத்தா இருவரும் பாடல்களை எழுதுகின்றனர். படப்பிடிப்பு கும்பகோணத்தில் விரைவில் தொடங்க உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT