நியூஸ் ரீல்

கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகா் விஜய் அஞ்சலி

திமுக தலைவா் கருணாநிதி நினைவிடத்தில் நடிகா் விஜய் திங்கள்கிழமை (ஆக.13) அதிகாலையில் அஞ்சலி செலுத்தினாா்.

ஜி. அசோக்

திமுக தலைவா் கருணாநிதி நினைவிடத்தில் நடிகா் விஜய் திங்கள்கிழமை (ஆக.13) அதிகாலையில் அஞ்சலி செலுத்தினாா்.

திமுக தலைவா் கருணாநிதி மறைவுக்கு முன்னதாகவே, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்தாா் நடிகா் விஜய். சன் பிக்சா்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் சா்காா் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்த அவரால் உடனடியாக சென்னைக்கு திரும்ப முடியவில்லை. கருணாநிதி உடலுக்கு விஜய்யின் சாா்பாக அவரது மனைவி சங்கீதா இறுதி அஞ்சலி செலுத்தினாா்.

இந்நிலையில் படப்பிடிப்பை முடித்து விட்டு திங்கள்கிழமை அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியவா், விமான நிலையத்திலிருந்து நேரடியாக கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்றாா். அதிகாலை சுமாா் 4 மணியளவில் அங்கு மலா் வளையம் வைத்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினாா் விஜய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

SCROLL FOR NEXT