சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இயக்குனர் ஷங்கர் மூன்றாவது தடவையாக இணைந்திருக்கும் திரைப்படம் ‘2.0’ வெளியாகி ரசிகர்களின் பரவலான கவனத்தை பெற்று வருகிறது. இந்தக் கூட்டணியில் இதற்கு முன் வெளியான சிவாஜி’, ‘எந்திரன்’ திரைப்படங்கள் மிகப் பெரிய வெற்றியையும் வசூல் சாதனையும் பெற்றுத் தந்தது. 2.0 பொருத்தவரை மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகி தமிழ் சினிமாவின் தரத்தை உலக அரங்கில் நிலைநாட்டியுள்ளது. 40 சதவீதம் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 600 கோடிக்கு 3டியில் தயாராகியுள்ளது இத்திரைப்படம். இதில் ரஜினிகாந்த் விஞ்ஞானியாகவும் எந்திரனாகவும் இரண்டு வேடங்களில் வருகிறார். பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார்.
தொடர்ந்து 2.0 படத்தின் அடுத்த பாகமாக 3.0 படம் எடுக்கும் எண்ணம் இயக்குனர் ஷங்கரிடம் உள்ளது என்கிறது அவரது நெருங்கிய வட்டம். 3.0-வின் கதை விவாதத்தை இந்தியன்-2 படப்பிடிப்பு முடிந்ததும் தொடங்கவிருக்கிறாராம் ஷங்கர். ஆனால் அதில் வசீகரன் மற்றும் சிட்டி கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினி நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என்பதால் 3.0 படத்தின் சாத்த்தியத்தை காலம்தான் தீர்மானிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.