சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை!
ராம்சேவா எழுதி இயக்கி வரும் படம் 'என் காதலி சீன் போடுறா'. 'அங்காடி தெரு' மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
ராம்சேவா எழுதி இயக்கி வரும் படம் 'என் காதலி சீன் போடுறா'. 'அங்காடி தெரு' மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஷாலு நடிக்கிறார். 'ஆடுகளம்' நரேன், மனோபாலா, விஜய் டிவி. கோகுல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
அம்ரிஷ் இசையமைக்கிறார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது, 'காதலை வேறு கோணத்தில் அணுகி வந்திருக்கிறேன். அது எல்லாமே இளம் தலைமுறைக்கான புரிதலாகத்தான் இருக்கும். ஒரு படம் என்னென்ன அனுபவங்களைத் தரும் என எனக்குள்ளேயே ஒரு கணக்கு இருக்கிறது. அதற்குத் தகுதியாக இந்தப் படம் வந்திருக்கிறது. இந்தப் படம் ஒரு அசல் வாழ்க்கையை விட்டு, கொஞ்சமும் விலகாமல், ஏற்றி வைத்தும் சொல்லாமல், அச்சு அசலாக வந்திருப்பதுதான் விசேஷம். சொல்லியே ஆக வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறேன்.
சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை. ஆரம்பத்திலிருந்து உழைப்புதான் நம்மை உயரத்துக்குக் கொண்டு போகும் என எண்ணுகிறேன். அந்த முயற்சியில் இறங்கி இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். ஆரம்பித்த ஐந்து நிமிடத்திலேயே படம் உங்களை உள்ளே இழுத்துப் போட்டு விடும். காதல், அன்பு, கலாட்டா, துரோகம் எல்லாமும் கதை. எல்லாமே புது காட்சிகளாக எடுத்து முடித்திருக்கிறேன். சில விஷயங்களை ஊடுருவிப் பார்த்தால், இது எல்லோருக்குமான சினிமாவாகவும் இருக்கும்’ என்றார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.