சினிமா சோறு போடாது... ரசிகருக்கு அறிவுரை சொன்ன விஜய்!
முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி.... ரசிகரின் கடிதத்திற்குப் பதிலளித்த விஜய்...
1997-ல் இலங்கை ரசிகரின் கடிதத்திற்கு தற்போதையை முதல்வர் விஜய் எழுதிய பதில்.
எனது விருப்பத்துக்குரிய விஜய் அவர்களுக்கு,
இலங்கை நாட்டில் வாழும் உங்கள் ரசிகன் தங்கேஸ்வரன் எழுதும் மடல்.
Advertisement
Advertisement
உங்கள் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கும் படங்கள் எனக்குப் பிடிக்கும். அவர் படங்களில் நல்ல கதை, கதைக்கேற்ற இளம் பாத்திரங்கள், இனிமையான பாடல்கள் இருக்கும். அதை நான் அதிகமாக ரசிப்பேன்.
உங்களின் நடிப்புத் திறனை நான் அதிகமாகப் பாராட்டுகிறேன். உங்கள் நடிப்பிலும் உங்கள் அப்பாவின் கைவண்ணத்திலும் அன்று உருவான, "நாளைய தீர்ப்பு, முதல் "பூவே உனக்காக" வரை அனைத்துப் படங்களையும் நான்கு ஐந்து முறை பார்த்து ரசித்துள்ளேன். அதிலும் நான் அதிகமாக ரசித்துப் பார்த்த படம் "பூவே உனக்காக”, அதில் இறுதியில் நீஙகள் பாடும் 'ஆனந்தம்... ஆனந்தம்... பாடும்' என்னும் சோகப் பாடல் எனது நெஞ்சை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியது. அது மட்டுமல்ல நீங்கள் இறுதியில் பேசும் உதாரணங்கள் என் மனதை இந்தியாவிற்கே கொண்டு வந்துவிட்டது. "ஒரு தடவை பூத்த மலர் வாடினால் மறுபடி மலராது. ” என்று நீங்கள் பேசிய வசனம் நன்கு ஒரு உதாரணமாக அமைந்திருந்தது.
எங்கள் ஊரில் தங்களின் திறமையைப் பார்த்து ரசிக்க, சொந்தமாக டி.வி. டெக், ஜெனரேட்டர் வாங்கியுள்ளேன். அவற்றை அடிக்கடி போட்டுப் பார்ப்பேன். அடுத்து வருகிற உங்கள் ’செல்வா’, 'காலமெல்லாம் காத்திருப்பேன்’ போன்ற படங்களை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்.... நான் அடிக்கடி பார்க்க உங்கள் புகைப்படத்தை அனுப்பவும்.
தொடர்ந்து எனது கடிதங்கள் வான் கடிதம் மூலம் பறந்து வந்து தங்களைத் தழுவும்.
இப்படிக்கு,
உங்கள் ரசிகன் எஸ். தங்கேஸ்வரன்,
மட்டக் களப்பு, இலங்கை.
-----------------------
அன்பிற்குரிய ரசிகர் எஸ். தங் கேஸ்வரன் அவர்களுக்கு...
உங்கள் விஜய் எழுதுகிறேன். நிம்மதி கிடைக்காத காலத்தில் என்னை நினைத்து நீங்கள் எழுதிய கடிதத்தை என் உயிரினும் மேலாக மதிக்கிறேன். உங்கள் பாராட்டுதலுக்கும் அன்பிற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் .
என் படங்களைப் பலமுறை பார்த்து ரசித்ததாக எழுதியிருந்தீர்கள். என் படங்களில் உள்ள நிறை, குறைகளை விமர்சித்து தைரியமாக எழுதுங்கள். அப்பொழுதுதான் என் ரசிகர்கள் என்னிடத்தில் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள முடியும்.
"பூவே உனக்காக...” படத்தில் நான் பேசிய வசனங்கள் உங்களை அதிகமாகப் பாதித்தது என்று எழுதியிருந்தீர்கள். அதற்கு நாம் இயக்குநர் விக்ரமன் அவர்களுக்குத்தான் நன்றியைச் சொல்ல வேண்டும். உங்கள் ஊரில் என் படங்களை யும் பாடல்களையும் பார்க்க சொந்த மாக T.V. டெக் மற்றும் ஜெனரேட்டர் வாங்கியுள்ளதாக எழுதியிருந்தீர்கள்.
என் படங்களைப் பார்ப்பதை வேலையாக வைத்துக் கொள்ளாமல்... பொழுதுபோக்கிற்காக வைத்துக் கொள்ள வேண்டும். சினிமா சோறு போடாது. நாம் செய்கிற தொழில்தான் நமக்குச் சோறு போடும். "செய்யும் தொழிலே தெய்வம்..’ ஆகையால் முதலில் தொழி லுக்கு முன்னுரிமை கொடுங்கள். பிறகு சினிமா..!
உங்கள் வான் கடிதத்தை என் வசந்த வாசல் அன்போடு அரவணைக்கும்.
இப்படிக்கு,
உங்கள் அன்பு விஜய்.
சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் பிப். 1 1997 ஆம் ஆண்டு வெளியான கடிதம்.
The reply written in 1997 by the current Chief Minister Vijay to a letter from a Sri Lankan fan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.