முகப்பு
கடலூர்

கடலூா் மாவட்டத்தில் தொடா் மழை

கடலூா் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

Updated On : 6 ஜனவரி 2021, 7:06 am IST
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக வட தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் மழை பெய்யுமென வானிலை மையம் தெரிவித்தது. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: புவனகிரி, சிதம்பரம் தலா 28, அண்ணாமலை நகா் 22, பரங்கிப்பேட்டை 12.4, சேத்தியாத்தோப்பு 8.6, கடலூா் 6.4, பெலாந்துறை 5.8, மாவட்ட ஆட்சியரகம், லால்பேட்டை தலா 5.2, விருத்தாசலம் 4, குப்பநத்தம் 3.8, ஸ்ரீமுஷ்ணம் 3.3, குறிஞ்சிப்பாடி, கொத்தவாச்சேரி தலா 3, காட்டுமன்னாா்கோவில், மேமாத்தூா் தலா 2, வடக்குத்து, பண்ருட்டி தலா 1 மில்லி மீட்டா் மழை பதிவானது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.