டிரம்ப்பைத் தொடர்ந்து சீனா செல்கிறார் விளாதிமீர் புதின்!
அமெரிக்க அதிபர் டிரம்ப்பைத் தொடர்ந்து சீனா செல்கிறார் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பயணத்தை நிறைவு செய்திருக்கும் நிலையில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மே 19ஆம் தேதி இரண்டுநாள் பயணமாக சீனா செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.
ரஷிய - சீன உறவுகளைப் பலப்படுத்தவும், இருநாடுகளுக்குள்ளும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடன் விளாதிமீர் புதின் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மற்றும் உள்ளூர் விவகாரங்கள் குறித்து இருவரும் தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவிருப்பதாகவும், சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முதல் முறையாக சீனா சென்று திரும்பிய நிலையில், ரஷிய அதிபர் புதினின் பயண செய்தி வெளியாகியிருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் சீனா சென்று திரும்பியிருந்தது தலைப்புச் செய்தியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Russian President Vladimir Putin to follow US President Trump to China
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.