FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அமெரிக்கா - சீனா இடையே தொடரும் கருத்து வேறுபாடுகள்!

அமெரிக்கா - சீனா இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நீடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனா-அமெரிக்கா - கோப்புப் படம்
பகிர்:

சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வெள்ளை மாளிகையில் சந்திப்பு நடத்திய நிலையில் இரு நாடுகளிடையே சுமூகமான சூழல் அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அமெரிக்கா - சீனா இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நீடிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீன அதிபர் ஷி ஜின்பிங் கடந்த வாரம் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பிருந்தே இரு தரப்பிலும் சில சிக்கல்கள் இருந்ததாகவும், அதுதொடர்பாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை, டிரம்ப்பின் நெருங்கிய உதவியாளரான ஸ்டீவ் டெய்ன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ”இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்துவது மிகவும் முக்கியம். ஏனெனில், இரு தரப்பிலும் தீவிரமான கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான தீர்வு அதிலிருந்து பின்வாங்குவது அல்ல. மாறாக தொடர்ந்து ஈடுபாட்டுடன் செயல்படுவதே அதற்குத் தீர்வு” என்று கூறினார்.

முக்கிய கனிமங்கள் தொடர்பான விவகாரத்தில் சீனா தனது ஆதிக்க நிலையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதாக அமெரிக்கத் தூதர் டேவிட் பெர்டியூ முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு பேசினார்.

ஸ்மார்ட்போன்கள் முதல் போர் விமானங்கள் வரையிலான தயாரிப்புகளுக்கு முக்கியத் தேவைகளாக உள்ள 'அரிய வகை கனிமங்கள்', உலகின் மிகப்பெரிய இரு பொருளாதார நாடுகளுக்கும் இடையே ஒரு முக்கிய மோதல் புள்ளியாகத் தொடர்ந்து நீடிக்கின்றன.

வெள்ளை மாளிகை சார்பில் கடந்த வாரம் உச்சி மாநாடு தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், அரிய வகை கனிமங்கள் மற்றும் பிற முக்கிய கனிமங்களின் விநியோகச் சங்கிலித் தட்டுப்பாடு குறித்த அமெரிக்காவின் கவலைகள் பற்றி இரு தரப்பும் தொடர்ந்து பணியாற்றும் என்றும், விநியோகத்தை மீண்டும் சரியான நிலைக்குக் கொண்டு வருவதே இதன் நோக்கம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அரிய வகை கனிமச் சுரங்கத் தொழிலில் உலகளவில் சுமார் 70 சதவீதமும், அவற்றைச் சுத்திகரிப்பதில் கிட்டத்தட்ட 90 சதவீதமும் சீனாவின் பங்களிப்பாக உள்ளது.

அதுமட்டுமின்றி, தைவான் விவகாரமும் அமெரிக்கா - சீனா இடையே முக்கிய மோதல் புள்ளியாகத் தொடர்கிறது.

தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வது தொடர்பாகப் பேசிய டெய்ன்ஸ், "அதற்கான விடை தெரிந்த ஒரே நபர் டிரம்ப் மட்டும்தான். இது தொடர்ந்து விவாதிக்கப்படும் ஒரு விஷயமாக இருக்கும்; இது முடிவுக்கு வரப்போவதில்லை," என்று கூறினார்.

அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையிலும், கடந்த மே மாதம் டிரம்ப் சீனா செல்வதற்கு முன்பு, 14 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனையை தற்காலிகமாக வெள்ளை மாளிகை நிறுத்தி வைத்திருந்தது.

அதற்கு முன் டிசம்பரில் 11 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க ஆயுத விற்பனைத் திட்டத்திற்கு சீனாவிடம் கடுமையான எதிர்ப்புகளைக் கிளப்பியது.

கடந்த செப். 24 அன்று நடைபெற்ற சந்திப்பில், தைவானின் சுதந்திரத்தை வெளிப்படையாக எதிர்க்க டிரம்ப்பை ஷி வலியுறுத்தியதாக செய்தி வெளியானது.

அமெரிக்காவில் நடைபெற்ற உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, அடுத்த மாதம் ஷென்சென்னில் நடைபெறவுள்ள ஏபிஇசி கூட்டத்திலும், அதைத் தொடர்ந்து டிசம்பரில் மியாமியில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சிமாநாட்டிலும் மீண்டும் சந்திக்க டிரம்ப் மற்றும் ஷி ஆகியோர் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

summary

Reports indicate that differences of opinion persist between the United States and China.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments