FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வரி குறைப்பு: அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்படும் என சீனா நம்பிக்கை!

அமெரிக்கா - சீனா இடையே வரிகளைக் குறைப்பது தொடர்பாக இரு நாடுகளும் விரைவில் ஒரு உடன்பாட்டை எட்டவுள்ளதாக சீனா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 செப்டம்பர் 2026, 8:31 pm IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் - AP
பகிர்:

அமெரிக்கா விதித்த இறக்குமதி வரிகளைக் குறைப்பது தொடர்பாக சீனாவும் அமெரிக்காவும் விரைவில் ஒரு உடன்பாட்டை எட்டவுள்ளதாக சீனா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டுத் தலைவர்களும் சில நாள்களில் சந்திக்கவுள்ள நிலையில் இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சீன செய்தித் தொடர்பாளர் ஹுவாங் லிங் செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். மேலும், 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கான வரிக் குறைப்புகளை மேற்கொள்ள இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே இந்தாண்டில் மூன்றாவது முறையாக வருகிற செப். 24 அன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இரு நாட்டு உறவுகளை மேம்படுத்த வரி குறைப்பு அறிவிப்புகள் வெளியாகும் என சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதற்கு முன்னர் மே மாதம் பெய்ஜிங்கில் நடைபெற்ற இருவரின் சந்திப்பின்போது, அமெரிக்கா - சீனா இடையில் வர்த்தக நிர்வாகம் மேற்கொள்ள வர்த்தக வாரியம் அமைக்கவும், அதனுடன் முதலீட்டு வாரியம் அமைக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

சீன இறக்குமதிகள் மீதான வரிகளை டிரம்ப் அதிகளவு உயர்த்தியதால், சீனாவும் பதிலடி கொடுக்கும் விதமாக வரிகளை உயர்த்தியிருந்தது. இரு நாடுகளுக்கும் வரிப் போர் மூண்டதால் சமாதானத்தை எட்டும் விதமாக இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

வர்த்தக வாரியம் உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் வரி குறைப்பும் முக்கிய அங்கமாக உள்ளது. இருதரப்பிலும் அதிக வரி விதிக்கப்பட்டுள்ள முக்கியத்துவமற்ற பொருள்களின் மீதான வரியைக் கண்டறிந்து குறைப்பதே இதன் நோக்கம்.

இரு நாடுகளும் மேற்கொண்ட தற்காலிக சமாதானப் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் நவம்பர் 10 உடன் முடிவடையவுள்ளது. இந்த நிலையில், பரந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும், குறிப்பிட்ட பொருள்களுக்கான வரி குறைப்புகள் மட்டுமே நிகழ வாய்ப்புள்ளதாகவும் பார்க்லேஸ் வங்கி ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

summary

Tariff reduction: China confident an agreement will be reached with the US!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments