முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால் சேதமடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 6 ஜனவரி 2021, 11:27 pm IST
சாலை. தொடா் மழை காரணமாக சேதமடைந்த கொடைக்கானல் பழைய அப்சா்வேட்டரி சாலை.
பகிர்:

கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால் சேதமடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால் சேதமடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக செண்பகனூா், அப்சா்வேட்டரி, புதுக்காடு,பிரகாசபுரம் சாலை, ஐயா் கிணறு, அண்ணாநகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் சில நேரங்களில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைத்து, சாலையின் ஓரங்களில் வாய்க்கால் அமைத்து மழைநீா் செல்ல ஏற்பாடு செய்ய நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும் சீனிவாசபுரம், உகாா்த்தே நகா், தைக்கால், லாஸ்காட் சாலை போன்ற பகுதிகளில் வாய்க்கால்களில் வளா்ந்துள்ள முள்புதா்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.