பன்மொழி அறிவும் பண்பாடும்
மணி மகுடம் கனமாக இருக்கிறது என்று கழற்றி வைக்க விரும்பிய மௌன மன்னர், பத்து ஆண்டுகளில் மூன்றாம் முறையாக ஊடகப்
மணி மகுடம் கனமாக இருக்கிறது என்று கழற்றி வைக்க விரும்பிய மௌன மன்னர், பத்து ஆண்டுகளில் மூன்றாம் முறையாக ஊடகப் பேட்டிக்கு அண்மையில் நாள் ஒதுக்கினார்.
கூட்டத்தில் தமிழகத் தொலைக்காட்சி எதையும் காணோம். இங்கேதான் "வாங்க சார், வாங்க இரண்டு மனை வாங்கினால் ஒரு மனை இலவசம்' என்கிற விளம்பரத்திற்கே நேரம் போதவில்லையே.
தென்னிந்தியாவில் பொங்கல் திருநாள்' குறித்து முனைவர் ஆறு. இராமநாதன் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய நாட்டுப்புறவியல் மாநாட்டில் ஓர் ஆய்வுரை படித்தார். இவர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நாட்டுப்புறவியல் மொழிப்புலத் தலைவர்.
"குளிர்காலத்தின் நடுப்பகுதியில் சூரியன் வடக்கு நோக்கி நகர ஆரம்பிக்கும் நாளே சூரியனின் பிறந்த நாளாக ரோமானியர்கள் வழிபட்டு வந்தனர். கிறிஸ்தவர்கள் அந்நாளையே கிறிஸ்து பிறந்த நாளாகக் கொண்டாடினர்.
இதன்படி ரோமிலும் சூரியன் வடக்கு நோக்கி நகரும் நாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டதை அறிய முடிகிறது. அத்தகைய கொண்டாட்டத்துடன் கிறிஸ்து பிறந்த நாள் இணைக்கப்பட்டதையும் அறிய முடிகிறது.
அங்கு டிசம்பர் 25இல் இது நிகழ, நமக்கு ஜனவரி 14 அல்லது 15 ஆவது நாளில் இது நிகழ்வதாகக் கூறப்படுகிறது. இது விளக்கப்பட வேண்டிய பகுதி.
மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதியார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் தை முதல் நாளில் தான் புத்தாண்டு தொடங்குவதாகக் கருத்துரைத்திருக்கின்றனர். இவை அனைத்தும் ஆழ்ந்த சிந்தனைக்குரியவை' என்கிறார் இந்தப் பேராசிரியர்.
வானவியலார் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, 2000 ஆண்டுகளுக்கு முன்பு சூரியன் மகரம் (சுறவம்) ஆகிய கடலாழி போன்ற வடிவ விண்மீன் கூட்டத்தில் இயங்கியது. உத்தராயண தொடக்கம், "மகர சங்கிர ஆந்தி' கேரளத்தில் கொண்டாடப்படுகிறது.
பூமியின் சுழற்சிக்கு அச்சுத் தலையாட்டமே காரணம், உண்மையான "தை' மாதம் டிசம்பர் 21 அன்றே தொடங்கியும் விட்டது. நமக்கென்ன, பழையபடி, 20 நாள்கள் தள்ளியே "தை' அறிவிக்கிறோம். ஆனால் சங்கத் தமிழர் மரபான தைநீராடல் இன்று மார்கழி நீராடல் ஆனது.
சங்க இலக்கியத்தில் பரிபாடல் காட்டும் "ஞாயிறு காயா நளி மாரிப் பின்குளத்து' (11:76) என்றபடி பண்டைக் காலத்தில் மாரி கழிந்த (மார்கழி) - தை மாதத்தில் ஆம்பல் குளத்தில் நீராடினோம். "தையில் நீராடிய தவம்' (கலித்தோகை 59:13), தைநீராடல் (பரிபாடல் 11:134) என்று எல்லாம் நம் முன்னோர் குறித்தனர்.
உழவும், உணவும் சிறக்கும் "தைத் திங்கள்' (குறுந்தொகை 196:4) தமிழர்க்கு தெய்வ மாதம்.
அதனால்தான் ஊழல் இன்றி, சாதி, மத, மொழி, இன பேதம் இன்றி "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார் சமய நோக்கே இல்லாத தெய்வப் புலவர் திருவள்ளுவர். அவரையும் கிறிஸ்து பிறந்த நாளை ஒட்டியே கொண்டாடு
கிறோம்.
இறந்தவர்களை நினைத்து வழிபடுவது நம் மரபு. மூதாதையர் எரிந்து வானில் புகையாகக் கலந்து விடுவதாக நம் முன்னோர் கருதி இருக்க வேண்டும். அவர்களை நெருப்பாக, ஆகாயத்தில் அனைத்து ஒளிப்பொருள்களாய் நம்பினர். ஞாயிறு, திங்கள், விண்மீன்கள் எல்லாவற்றிலும் அவர்களைப் போற்றத் தொடங்கினர்.
சூரியன் நெருப்பு வடிவம். உணவுக்குத் தேவையான மாவுச்சத்து தயாரிக்க உதவும் கரியமில வாயு, வான்மழை, பச்சையம், ஒளி ஆற்றல் அனைத்தும் தரும் ஒரே வள்ளல் ஞாயிறு மட்டுமே.
உலகின் முதல் ஒலி "அம்' அல்லது "மா' என்றாலும் முதல் சொல் "தீ' என்கிறார்கள். சிவன், விஷ்ணு போன்ற பெயர்ச் சொற்கள், சைவ, வைணவ என உரிச்சொற்கள் ஆனதைப்போல, தீ-தை, தெய்வ ஆயிற்று.
பக்கத்தில் நின்று அம்மை அப்பனை வலம் வந்த மகனுக்கு கருணையுடன் "ஞானப்பழம்'. தெற்கே போய் ஊரைச் சுற்றும் தகப்பன் சாமிக்கு அது எட்டாக்கனி.
திருநாளோ, தெருநாளோ, திராவிடத் தெய்வம் சொன்னால் அட்சரம் மாறாமல் ஏற்றுக்கோள்கிறோம். முன் மண்டையில் பூட்டிய நம் பூட்டுக்குச் சாவியைத் தொலைத்து ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. எப்படியோ, கிறிஸ்துவின் எஸினி ஆதரவாளர்கள், பண்டைய ஜெருசலேம் தேவாலயத்தினரின் திங்கள் அடிப்படையிலான ஆண்டுக் கணக்கை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுக்கு சூரிய அடிப்படைதான். வெப்ப விடியல்தான் நாளின் தொடக்கம்.
ஆனால் பண்டைய ரோமானியர்களுக்கு நடு இரவே நாள் தொடங்கும். "அவரைச் சிலுவையில் அறையும்போது காலை ஒன்பது மணி' என்கிறது விவிலியம் (மாற்கு 15:25). நண்பகல் தொடங்கி மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று (மாற்கு 15:33).
தை மாதம், சூரிய உதயத்தின் முன் கிழக்கே அடிவானில் கடலாழி (சுறவம்) போன்ற வடிவத்தில் ஒரு விண்மீன் கூட்டம் தட்டுப்படும். அதுவே "மகரம்' (இஹல்ழ்ண்ஸ்ரீர்ழ்ய்ன்ள்). அதனாலேயே இது மகரப் பொங்கல்; உழவர் திருவிழா; தமிழர் திருநாள்.
பண்டைத் தமிழர்க்கு ஆண்டுக் கணக்கு, சூரிய அடிப்படையைக் கொண்டது. வானில் சூரியன் இயங்குவதாகத் தோன்றும் மேஷம் (ஆடு), இடபம் (வருடை) ஆகிய பன்னிரண்டு உடுக்கணங்களில் மூன்றாவது மிதுனம் (ஜெமினி). தமிழிலும் அதே நிலை.
நெடுநல்வாடை (வரி 160) காட்டும், "ஆடு தலை'யாகத் தொடங்கும் சூரிய வீதி மண்டல ஓவியத்தில், "வரை ஆடு வருடைத் தோற்றம் போல' (பட்டினப்பாலை 139) என்றும், "கடும்பு ஆட்டு வருடையொடு' (நற்றினை 119:7) என்றும் எழுதினர் சங்கப் புலவர். ஆனால் மாதங்களுக்கு முழுநிலா தங்கும் விண்மீன் கூட்டத்தின் பெயரையும் ஏற்றனர்.
"ஜெமினி' எனப்படும் மிதுன உடுக்கணத்தில் இரு முக்கிய விண்மீன்களில் ஒன்று "பொல்லூக்ஸ்'. மற்றொன்று, "காஸ்டர்'. இரட்டையாகத் தெரியும். அதனால் இரண்டு சிறுவர் படங்களை இதன் குறியீடாக வரைகிறோம்.
பொல்லூக்ஸ் என்பது கிரேக்க ஒலியினைச் சற்றே நெகிழத்தி உச்சரித்தால் "புலைய' என்றுவரும். தாழ்ந்தவன் அல்லது "தன்பி'(ன்), தம்பி. "காஸ்டர்' என்பதே வடமொழியில் "ஜேஷ்ட(ர்)'. மலையாளத்திலும் அண்ணன் - தமியன் - தமையன் அல்லவா?
தனக்கு மூத்தது, தான் பிறந்த வயிற்றில் பிறந்தது என்ற வகையிலும், காஸ்டர் என்ற ஆங்கிலச் சொல்லினை சற்று நெகிழ்த்தி உச்சரித்தால் இன்றைக்கு "சாஸ்தா' என்று ஒலிக்கும்.
குடும்பத்தின் அல்லது குலத்தின் மூலவர் என்ற பொருளும் வருகிறதே. அகஸ்திய(ர்) அகத்தியர் ஆன மாதிரி, ஆஸ்டர் என்ற விண்மீன் பெயர் ஆத்(தி)ரை ஆவது போல, ஜேஸ்ட - சாஸ்த மூலச்சொல் ஆகிறதே.
புலைய - ஜேஷ்ட (கீழே - மேலே) ஆன இரட்டைகள் கருத்தாக்கத்திற்கு கிரேக்கர் இட்ட சொல் - ஜெமினி. ஆனால் இது ஆண்-பெண் ஆகிய இருவர் என்றே பழந்தமிழர் கண்டனர்.
இரு காமத்து இணை ஏரித் தோற்றம் பட்டினப்பாலையில் (39) வருகிறதே. "காம'க் குறியீடான மிதுனம் (ஜெமினி). அதன் அருகே கடக உடுக்கணத்தின் தோற்றம் கிரேக்கத்தின் மூன்றாவதான "காமா' (எஹம்ம்ஹ) என்ற எழுத்து வடிவம் போல் இருக்கும்.
அதனாலேயே, ஜெமினியை "காமினி' என்றுதான் உச்சரிக்கவேண்டும். "காம'க் களிப்பு ஆங்கிலத்தில் "கேம்' (எஹம்ங்) விளையாட்டு ஆனது. பாருங்கள், ஒரு மனைவி, இரு மனைவி, பல மனைவி கொண்டோரை ஆங்கிலத்திலும் முறையே "மோனோ - காமி, பை - காமி, பாலிகாமி' என்கிறோம்.
ஆனால் இன்றைக்கு மிதுனத்திற்கு அடுத்த கடக (நண்டு) உடுக்கணத்தில் அடங்கிய "டெல்டா கான்சரி' (ஈங்ப்ற்ஹ இஹய்ஸ்ரீங்ழ்ண்) விண்மீனையே "புஷ்ய' விண்மீன் என்கிறோம். "நீலாம்பல்' என்ற அர்த்தத்தில் வடமொழியில் "பூசம்' என்றனர். தைப்பூசத் திருவிழா இன்று பிரபலம். பூசை - பூ (மலர்) இட்டு "செய்'கின்ற "தெய்வ'த் திங்கள் - தைத்திங்கள்.
முளைக்கும் நாற்று தானே மலையாளத்திலும் "தை'. "தெங்கின் தை' என்றால் தென்னங்கன்று அல்லவா?
பன்மொழி அறிவும் பண்பாடும் கற்ற நம் முன்னோரை விஞ்சிய விவேகம் இன்று எவருக்கு உண்டு?
கட்டுரையாளர்: இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).