முகப்பு
கட்டுரைகள்

மாய்ந்து வரும் மானாவாரி விவசாயம்!

பொதுவாக இந்திய விவசாயமே நெருக்கடிக்குள்ளாயிருக்கிறது. அண்மையில், வேளாண்மை அமைச்சரகம் வெளியிட்டுள்ள நிலப் பயன்பாடு தொடர்பான புள்ளிவிவரம் இதை நிரூபிக்கிறது. இந்த நெருக்கடியில் அதிகம் பாதிப்புக்கு மானாவாரி விவசாயம் உள்ளாகியிருப்பது புலனாகிறது.

கட்டுரைகள்

மாய்ந்து வரும் மானாவாரி விவசாயம்!

பொதுவாக இந்திய விவசாயமே நெருக்கடிக்குள்ளாயிருக்கிறது. அண்மையில், வேளாண்மை அமைச்சரகம் வெளியிட்டுள்ள நிலப் பயன்பாடு தொடர்பான புள்ளிவிவரம் இதை நிரூபிக்கிறது. இந்த நெருக்கடியில் அதிகம் பாதிப்புக்கு மானாவாரி விவசாயம் உள்ளாகியிருப்பது புலனாகிறது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:53 AM
பகிர்:

பொதுவாக இந்திய விவசாயமே நெருக்கடிக்குள்ளாயிருக்கிறது. அண்மையில், வேளாண்மை அமைச்சரகம் வெளியிட்டுள்ள நிலப் பயன்பாடு தொடர்பான புள்ளிவிவரம் இதை நிரூபிக்கிறது. இந்த நெருக்கடியில் அதிகம் பாதிப்புக்கு மானாவாரி விவசாயம் உள்ளாகியிருப்பது புலனாகிறது.

1991-92 ஆண்டில் நிகர சாகுபடி நிலம் 14 கோடியே 16 லட்சத்து 37 ஆயிரம் ஹெக்டேர் என்ற நிலை, 2014-15இல் 14,11,30,000 ஹெக்டேர் - அதாவது சுமார் 5.7 லட்சம் ஹெக்டேர் நிகர சாகுபடி நிலப்பரப்பு குறைந்துவிட்டது. இதுவே இரு போகம் அல்லது மூன்று போகம் என்று கவனித்தால், மொத்த சாகுபடி நிலப்பரப்பு ஏறத்தாழ 10 லட்சம் ஹெக்டேர் அளவில் குறைந்திருக்க வாய்ப்பு உண்டு.

ஒட்டுமொத்த நிகர சாகுபடி நிலத்தில் ஆண்டுதோறும் மேல் மண் இழப்பு 5 கோடி டன்கள். சுமார் 40 சதவீத விளைநிலங்கள் மண்ணரிப்பால், ரசாயனப் பயன்பாட்டாலும் சக்தியிழந்துள்ளன. மேல் மண்ணை மீட்கத் துரித நடவடிக்கை எடுத்தால்தான் உணவு உற்பத்தியில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்.

முதலாவதாக, மேல் மண்ணை மீட்டு மண்ணை வளப்படுத்த மண்ணில் மக்கு (ஏன்ம்ன்ள்) உற்பத்தி பெருக வேண்டும். மண்ணில் மக்கு அதிகரிக்க அதிகபட்சமாக இயற்கை இடுபொருள்களை வழங்க வேண்டும். மண்புழு உரம், மக்கிய கம்போஸ்ட், மரங்கள் உதிர்க்கும் சருகுகள், ஆடு மாடுகளின் கழிவுகள் ஆகியவற்றில் மக்குப் பொருள்கள் உண்டு.

இரண்டாவதாக, கொழுஞ்சி தக்கைப் பூண்டு, சித்தகத்தி போன்ற பசுந்தாள் பயிர்களைச் சாகுபடி செய்து மடித்து உழுதல். மூன்றாவதாக, நஞ்சையில் புஞ்சை செய்யும்போது பருப்பு வகைப் பயிர்களையும் வேர்க்கடலை சாகுபடியையும் மேற்கொள்ள வேண்டும்.

வேர்க்கடலை உள்பட எல்லாப் பருப்பு வகைப் பயிர்களையும் லெக்யூம் (கங்ஞ்ன்ம்ங்) என்பர். இத்தகைய பயிர்கள் காற்றில் உள்ள நைட்ரஜனைச் சேமித்து வேர் முடிச்சுகளாக வைத்துக் கொள்ளும். புஞ்சைக்குப் பின் நஞ்சை சாகுபடி செய்யும்போது நிறையத் தழைச்சத்து கிட்டும். கோடைப் பயிர்களாக நஞ்சையில் வேர்க்கடலை, காராமணி சாகுபடி செய்யும் ஒரு மரபு வட மாவட்டங்களில் உண்டு. கலப்புப் பயிராகப் பருத்தி, சோளம், வேறு புஞ்சை தானியங்கள் சாகுபடி செய்யும்போது வரப்புப் பயிராக துவரை சாகுபடி செய்வதுண்டு.

தஞ்சை டெல்டா மாவட்டங்களில் நஞ்சைக்குப் பின் புஞ்சையாகத் தாழை உளுந்து சாகுபடி செய்யும் மரபு உண்டு. முதல் போக சம்பா நெல் அறுவடை செய்யும்போது தாள் விட்டு அறுப்பதால் இரண்டாம் போக நெல் சாகுபடியை "தாளடி சம்பா' என்பர். விட்ட தாள்களை நீர்க்கட்டி சேற்றுழவு செய்யும்போது நெல்லுக்கு வேண்டிய கரிமச் சத்தும் கிட்டும். பின்னர் தாளடி நெல்லைத் தாள் விடாமல் ஒட்ட அறுக்கும் முன்பு உளுந்து விதைப்பார்கள்.

தாளடி நெல் அறுக்கும்போது கால் மிதிபட்டு மண்ணுக்குள் விதை நேர்த்தியாகும். பின்னர் நெற்பயிர் இருந்த இடத்தில் உளுந்து முளைத்துப் பசுமை காட்சி தரும். இன்று அவ்வாறு தாளடி உளுந்து பயிரிடும் மரபும் தொலைந்துவிட்டது. வட இந்திய மாநிலங்களில் தீவிரமாகக் கொண்டைக் கடலை சாகுபடியை நஞ்சை - புஞ்சைகளில் செய்வதால் கடலைப் பருப்புக்குப் பற்றாக்குறை ஏற்படுவதில்லை. மண்வளமும் காப்பாற்றப்பட்டு வருகிறது.

பாசன நில மேம்பாடு குறித்த ஒரு நிலப் பயனீட்டுப் புள்ளிவிவரம் புஞ்சைப் பயிர் சாகுபடி குறைவதை எடுத்துக் காட்டுவதாயுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் பாசன நிலம் 4.9 கோடி ஹெக்டேரிலிருந்து 6.3 கோடி ஹெக்டேராக உயர்ந்துள்ளது. மானாவாரி நிலங்களில் பாசன வசதி பெறும்போது லாபம் தரும் மாற்றுப் பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்ய முன்வரலாம். சுமார் 1.4 கோடி ஹெக்டேர் சாகுபடி நிலம் பாசன வசதி பெற்ற காரணத்தினால் தண்ணீர் அதிகம் தேவைப்படும் நெல், கோதுமை, கரும்பு, வாழை, தென்னை, பருத்தி, மக்காச்சோளம், காய்கறி பழங்கள் சாகுபடி உயர்ந்துள்ளது.

தவிரவும், மேற்படிப் பயிர்களுக்கு உள்ள விலைப் பாதுகாப்பு பருப்பு வகைப் பயிர்களுக்கும் - குறிப்பாக துவரை, உளுந்து, பாசிப்பயறு, மசூர் என்ற துலுக்கப் பயறு, பட்டாணிப் பருப்பு போன்றவற்றுக்கும் சாமை, தினை, வரகு, குதிரைவால், காடைக் கண்ணி போன்ற சிறுதானியப் பயிர்களுக்கும் இல்லை என்பதாலும் உற்பத்தி குறைந்துவிட்டது.

இவ்வாறே எண்ணெய்வித்துப் பயிர்களான கடுகு, வேர்க்கடலை, எள் உற்பத்தியில் வளர்ச்சி இல்லை. மானாவாரியாகப் பயிரிடப்படும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் ஆகியவற்றின் சாகுபடி நிலப்பரப்பும் குறைந்துவிட்டது.

2014 மக்களவை கூட்டத்தொடரில் இந்திய விவசாய அமைச்சரகம் நிலப் பயனீடு குறித்து வழங்கிய ஒரு புள்ளிவிவரம் எந்த அளவுக்கு விளைநிலம் தொழில் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கிறது. அந்தக் கணக்கு அடிப்படையில் 4.78 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் தொழில் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் ஒடிசா மாநிலத்தில் மட்டும் 3.77 லட்சம் ஹெக்டேர் வரை நிலக்கரி, இரும்பு தாது, அலுமினியம் சுரங்கத் தொழிலுக்கு அர்ப்பணமாயுள்ளது. பருப்பு வகை உற்பத்தியிலும், எள் உற்பத்தியிலும் ஒடிஸா ஒரு முன்னணி மாநிலமாகும்.

நிலக்கரிச் சுரங்கம் மட்டுமே 3 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களை விழுங்கியுள்ளது. மற்ற துறைகளை தெர்மல் பவர், சிமெண்டு ஆலை, சுண்ணாம்பு சுரங்கம், இரும்பு உலை, இரும்பு தாது, அலுமினியம், நீர் மின்சாரம் வழங்கியவை 1.78 லட்சம் ஹெக்டேர்கள். எனினும், இந்தக் கணக்கில் வராத தேசிய நெஞ்சாலை 1 லட்சம் ஹெக்டேர் விளைநிலத்தை வழங்கியிருக்கலாம். மனைக்கட்டு நிலத்தைப் பொருத்தவரை கணக்குப் பிள்ளை அடங்கலில் சாகுபடி நிலம் என்றே பதிவாயிருக்கும். அப்படிப்பட்ட நிலம் பருப்பு, சிறுதானியம், நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்ற செம்மண் பூமிதான்.

உணவு உற்பத்தி குறித்த புள்ளிவிவரங்களை நுணுகி ஆராய்ந்தால் அரிசி, கோதுமை, கரும்பு, மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிர்களில் நல்ல வளர்ச்சி உண்டு. இவை எல்லாமே ஏற்றுமதிப் பயிர்கள். குறிப்பாக, அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதி மூலம் நாம் சராசரியாக 10 கோடி டாலர் அன்னியச் செலாவணி பெறுகிறோம்.

உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் கலோரி சக்தி மட்டுமே கணக்கில் கொள்ளப்படுவதால் அரிசி, கோதுமை பொது விநியோகத்தில் வழங்கப்படுகிறது. அதேசமயம், புரதச் சத்தை வழங்கக் கூடிய பருப்பு வகை உற்பத்தியில் கடந்த பத்து ஆண்டுகளாகத் தேக்க நிலை. ஆண்டுக்கு ஆண்டு இறக்குமதி மூலமே உள்ளூர்த் தேவை நிறைவேற்றப்படுகிறது. இதனால், நாம் இழந்து வரும் அன்னியச் செலாவணி மதிப்பு சுமார் 4 கோடி டாலர்.

கொழுப்புச் சத்து வழங்கும் எண்ணெய் வித்துப் பயிர்களான கடுகு, நிலக்கடலை, எள், சூரியகாந்தி உற்பத்தியிலும் வளர்ச்சி தேங்கிவிட்டதால், ஆண்டுக்கு ஆண்டு சமையல் எண்ணெய் இறக்குமதி உயர்ந்து அதனால் இன்று சுமார் 10 கோடி டாலர் அன்னியச் செலாவணியை இழக்கிறோம்.

மானாவாரியாக இந்தியாவில் விளையக் கூடிய கடுகு, எள், நிலக்கடலை, சூரியகாந்தி உற்பத்தியில் உகந்த வளர்ச்சி ஏற்படுமானால் அன்னியச் செலாவணியை மிச்சப்படுத்தலாம். இவ்வாறே மானாவாரியில் விளையக்கூடிய துவரை, உளுந்து, மசூர் போன்ற பருப்பு உற்பத்தி அதிகரிக்குமானால், நமக்கு அன்னியச் செலாவணி மிச்சமாவதுடன் உள்ளூர் விலைவாசியும் கட்டுக்குள் நிற்கும்.

மூன்றாவதாக, தாதுப்புச் சத்தை வழங்கும் சாமை, தினை, வரகு, காடைக்கண்ணி (பனிவரகு), குதிரைவாலி போன்ற சிறுதானிய உற்பத்தியும் மானாவாரியாக விளைபவை. அவற்றின் சாகுபடி ஒன்றுக்குப் பாதியாகக் குறைந்துவிட்டது.

நல்ல நீர்ப்பாசன வசதியுள்ள நஞ்சை நிலங்களில் கலோரி சக்தி தரும் மாவுச் சத்துள்ள அரிசி, கோதுமை, சர்க்கரைச் சத்துள்ள கரும்பும், வாழையும் விளைகின்றன. பாசன வசதியில்லாத மானாவாரி நிலங்களில்தான் புரதம், கொழுப்பு, தாதுப்புச் சத்து வழங்கும் பருப்பு, எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் விளைகின்றன. பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு மழைப் பொழிவில் தடுமாற்றம் தோன்றிவிட்டது.

புள்ளிவிவர அடிப்படையில் 2013-14இலும், 2014-15இலும் முறையே சராசரி, சராசரி அளவுக்கு மேல் அதிக மழை என்பதில் ஐயம் இல்லை. ஆனால் மழை எங்கு பெய்தது? எப்படிப் பெய்தது? என்ற கேள்விக்குப் பருவநிலையின் தடுமாற்றம் பதிலாகும். பாசன வசதியுள்ள நஞ்சை மண்ணில்தான் கூடுதல் மழை மட்டுமல்ல; சென்னை, திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி போன்ற ஊர்களில் ஒட்டுமொத்தப் பருவத்திலும் மூன்று மாதத்திற்குப் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாளில் பெய்துவிட்டது.

பாசன வசதியில்லாத மேட்டு நிலங்களில் மழைக் குறைவு நீடிக்கிறது. புஞ்சை மானாவாரி பூமியைக் கொண்ட தக்காண பீட பூமியில் போதிய மழைப் பொழிவு இல்லை. மழை பரவலாகப் பெய்யாமல் ஒரு முறை பெய்த இடத்தையே மீண்டும் குறிவைத்துத் தாக்குவது ஏன்? காடுகளில் மரங்களை வெட்டி அடர்த்தியைக் குறைத்ததால் புவிவெப்பமாகிக் காலநிலை தடுமாறுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மனித உணவுத் தேவையைக் கலோரி சக்தியை வைத்துக் கணக்கிடாமல், புரதம், கொழுப்பு, தாதுப்பு, வைட்டமின் வழங்கும் மானாவாரிப் பயிர்களை வைத்துக் கணக்கிட, சத்து நிரம்பிய மானாவாரி நிலங்கள் மாய்ந்து, ஓய்ந்து விடாமல் மீட்டுருவம் செய்தால்தான் ஆரோக்கியம் நிரம்பிய இந்தியப் பிரஜைகளை உருவாக்க முடியும்.

ஆர்.எஸ். நாராயணன்

முழு கட்டுரையைப் படிக்க →