முகப்பு
கட்டுரைகள்

மூலிகை வாரியம் அமைப்போம்!

நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை ஒரு கணம் நோட்டமிட்டால், நாம் வாழும் வாழ்க்கையில் மலிந்துள்ள துயரங்கள் எவ்வளவு கொடூரமானவை என்று

கட்டுரைகள்

மூலிகை வாரியம் அமைப்போம்!

நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை ஒரு கணம் நோட்டமிட்டால், நாம் வாழும் வாழ்க்கையில் மலிந்துள்ள துயரங்கள் எவ்வளவு கொடூரமானவை என்று

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:01 AM
பகிர்:

 கார்த்திகைக் கிழங்கு, சர்ப்பகந்தா, நித்திய கல்யாணி போன்ற மூலிகைகளிலும் உயிர் காக்கும் மருந்துகள்
 உள்ளனவென்பது பழைய செய்தி. அபினியும்
 அவ்வாறே. இப்படிப்பட்ட அரிய மருந்துகள்
 அடங்கிய மூலிகைகளை மலிவாக ஏற்றுமதி செய்து
 ஏமாளிகளாக எவ்வளவு காலம் வாழ்வது?
 நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை ஒரு கணம் நோட்டமிட்டால், நாம் வாழும் வாழ்க்கையில் மலிந்துள்ள துயரங்கள் எவ்வளவு கொடூரமானவை என்று அறியலாம். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது பழமொழி. ஆனால், இன்று நோயில்லாத மனிதனே இல்லை.
 அன்றாடம் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு இவற்றுடன் உணவுக்கு முன், உணவுக்குப் பின் என்று கூடவே மாத்திரை மருந்துகளும் உணவின் அங்கமாகிவிட்டன. நோயில்லாமல் வாழ இந்திய மருத்துவமான சித்த, ஆயுர்வேத, யுனானி வழிகாட்டியது. நோயுடன் வாழ அலோபதி வழிகாட்டினாலும், அலோபதியே கொடி கட்டிப் பறக்கிறது.
 இயற்கையோடு இயைந்து மாசற்ற புவியியல் சூழலில் நஞ்சில்லா உணவுகளை உட்கொண்ட நம் முன்னோர்களுக்கு இந்திய மருத்துவம் வெற்றியளித்தது. இன்று இயற்கைக்கு மாறாக, செயற்கையான ரசாயனங்களின் அறிமுகத்தால் இந்திய மருத்துவம் தோற்றுப் போய்விட்டது.
 சுகாதாரமற்ற நச்சு விவசாயம், சுகாதாரமற்ற நஞ்சு உணவு, கலப்பட உணவு, நிறமிகள் சேர்க்கப்பட்டுக் கிருமிகளைத் தோற்றுவிக்கும் ஜங்க் ஃபுட் என்னும் உணவு அயிட்டங்கள் போன்ற காரணிகளினால் மனிதன் நோயில் படுத்துவிட்டான்.
 "எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்' என்பது பழமொழி. நமது உடலில் பத்திரமாகக் காப்பாற்றப்பட வேண்டிய தலையில் உள்ளது மூளை. இந்த மூளையைக் காக்க உடலில் ஒரே சீரான ரத்த ஓட்டம் வேண்டும்.
 குறிப்பாக, ரத்த அழுத்த நோய் ஏற்படாமல் இதயம் காப்பாற்றப்படுமானால் மூளை பாதிக்கப்படாது. இல்லாவிட்டால் கை கால் இழுத்துக் கொள்ளும். வாய் கோணிக் கொள்ளும். உணவை வாய்க்குள் கொண்டு செல்லவும், தனக்குத்தானே மலசுத்தி செய்து கொள்ளவும் கை உதவாதபோது வாழ்ந்து என்ன பயன்?
 தவறான கொழுப்பு புரத உணவால் கொலஸ்ட்ரால் ஏற்படுகிறது. ரத்தக் குழாய் தடிமனாகிறது. ரத்த ஓட்டம் தடையுறுகிறது. அடைப்பு ஏற்படுகிறது. பைபாஸ் சர்ஜரி, ரத்தத்தில் சர்க்கரை, நீரிழிவு, குடல் நோய், மிகவும் கொடிய புற்றுநோய் எல்லாம் பெருகியதால் இவற்றை குணப்படுத்தும் புதிய புதிய அலோபதி மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன.
 இது ஒருபுறம் இருக்க, சுற்றுப்புற சுகாதாரம் கவனிக்கப்படாததால் கொசுக்களால் ஏற்படும் பறவைக் காய்ச்சல் பன்றிக் காய்ச்சல். இவற்றைக் கட்டுப்படுத்தும் ஆண்டிபயாட்டிக் மருந்துகளின் விலை குறைவுதான். அரசு மருத்துவமனைகள் மூலம் இவை இலவசமாகவே கிட்டும்.
 அதேசமயம், புற்றுநோய் - புற்றுநோய்த் தொடர்புள்ள இதய நோய் மருந்துகளின் விலை மிகவும் உயர்வாக உள்ளது. இப்படிப்பட்ட மருந்து உற்பத்தியிலும் விநியோகத்திலும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது.
 இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் கண்வலிக் கிழங்கு என்று அழைக்கப்படும் செங்காந்தள் மலர்களுடன் கூடிய கார்த்திகைக் கிழங்குகள் களைகளாக வேலி ஓரங்களில் மண்டும் கொடியினம். இதன் விதைகளையும், கிழங்குகளையும் ஏற்றுமதி செய்ய சாகுபடி உருவாகியுள்ளது.
 இவற்றிலிருந்து இதய நோய் - ரத்தப் புற்றுநோய்க்கான மருந்து தயாரிக்கப்படுகிறதாம். இவ்வாறே சர்ப்பகந்தி, நித்தியகல்யாணி (சுடுகாட்டு சாமந்தி) கூர்க்கன், அமுக்குரா, அபினி, கஞ்சா என்று பலவும் இதய நோய் - புற்றுநோய் - எய்ட்ஸ் நிவாரணி என்பதாகவும் தகவல்.
 இவை எல்லாம் உண்மையா என்பது "மில்லியன் டாலர்' கேள்வி. ஆனால் நாமோ அரைக் காசுக்கு ஏற்றுமதி செய்கிறோம். இந்திய மருத்துவத்தில் நாம் மூலிகைகளில் உள்ள மருத்துவப் பொருளைத் தனியாகப் பிரிக்காமல் கச்சாவாகப் பயன்படுத்துகிறோம். பச்சிலையாகவோ, லேகியமாகவோ, உலர்ந்த தூளை தேனிலும் நெய்யிலும் குழைத்தோ, கஷாயமாகவோ அருந்துவோம்.
 மேலை நாடுகளில் மேற்படி மூலிகை அல்லது மூலிகைப் பொருள்களின் மருந்துப் பொருளைத் தனியாகப் பிரித்து பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் மாத்திரைகளாகவோ, ஊசி மருந்தாகவோ பயன்படுத்தும்போது "மில்லியன் டாலர்' பதில்கள். நமக்குக் கிடைப்பது அரைக்காசு. ஒவ்வொரு மூலிகையிலிருந்தும் மிகவும் குறைவாயுள்ள மருந்து ரசாயனத்தைத் தனியே பிரித்தெடுக்கும் நுட்பமில்லாமல் பயன்படுத்தும்போது நோயிலிருந்து உடனடி நிவாரணம் கிடைப்பதில்லை.
 இந்திய மருத்துவத்தின் அருமை பெருமைகளையும், சித்தர்களின் சித்து விளையாட்டுகளையும், அகத்தியர், தேரையர், அஷ்டாங்க ஹிருதயம், சாரங்கதாரா, சரக சம்ஹிதா, ஸ்வேத சிகிச்சா என்றெல்லாம் பழம் பெருமை பேசிப் பயனுண்டோ? அவர்களின் அடிபற்றி எவ்வளவு தூரம் செல்ல முடியும்? இந்திய மருத்துவத்தில் புதிதாக இன்றைய கண்டுபிடிப்பைப் பற்றிக் கூற முடியுமா?
 இந்த விஷயத்தில் இந்திய மூலிகைகளான அபின், கஞ்சா வழங்கும் ரசாயனங்கள் கவனம் பெறுகிறது. அபின் என்பது அபூர்வமான ஆயுர்வேத மருந்து. தமிழிலும் தெலுங்கிலும் போஸ்தக்காய் என்று கூறுவார்கள். ஏறத்தாழ பருத்திக்காய் போல் இருக்கும். பருத்திக்காய்க்குள் பஞ்சு இருப்பதுபோல் பிஞ்சு விதைகளுடன் ஒருவகை திரவம் இருக்கும். அந்த திரவமே அபின்.
 காய் முற்றிவிட்டால் திரவம் விதைகளாக மாறிவிடும். அந்த விதைகள்தான் கசகசா. கசகசாவும் மருந்துப் பொருளே. ஆனால், அது அன்றாட சமையலுக்குப் பயனாகிறது.
 அபினியிலிருந்து மார்ஃபின், பெத்தடின், நார்க்கோடின், கோடின், திபென், நியோபைன், கிரைப்டோபென் என்று ஏகப்பட்ட ரசாயனங்கள் பிரித்தெடுக்கப்பட்டு அலோபதி மருந்துகளுக்கு ஊக்கம் வழங்கி வருகிறது.
 நாம் அருந்தும் காஃப் சிரப்பில் (இருமல் - சளி மருந்தில்) இவற்றின் பயன் உண்டு. அளவு அதிகமானால்கூட போதை வராது. தூக்கம் வரும்! மயக்க ஊசிக்கு இன்றளவும் பயன்படுவது மார்ஃபின், பேத்தடின் - எல்லாம் அபினியின் வழங்கலே. இது பழைய செய்தி. புதிய செய்தி கஞ்சா பற்றியது.
 அபினை விடப் பன்மடங்கு போதை தருவது கஞ்சா. கஞ்சாவின் இலை, பூ, காய், பழம், தண்டு எல்லாவற்றிலும் மருத்துவ ரசாயனங்கள் உள்ளன.
 கஞ்சா செடியின் அவ்வளவு பாகங்களையும் உறிஞ்சி எடுத்துவிட்டு எஞ்சிய சக்கை சணல். ஆகவே இந்த மூலிகைக்கு "ஹெம்ப்' என்பது ஆங்கில வழக்கு. திராவிட மொழிகளில் பங்கி. வடமொழிகளில் "பாங்க்', சம்ஸ்கிருதத்திலோ இதன் பெயர்கள் "விஜயா', "சித்தி பத்ரி'.
 இமயத்தில் உள்ள "பத்ரி நாதர்' உண்மையில் "பங்கி பாபா'. பத்ரி என்றால் கஞ்சா இலை. இப்புனிதப் பொருள் ஹோலிப் பண்டிகையில் கண்ணனுக்கும் ஆராதனைப் பொருள். ரஜினிகாந்த் "பங்கி அடிச்சேண்டா' என்று பாடியதும் இந்தி சூப்பர்ஸ்டார் "பானு பனாரஸ் வாலா' என்று பாங்க் கலந்த பீடாவை உண்டு ஆட்டம் போட்டதும் 'பதஅசஇஉ' என்று சொல்லக்கூடிய அருளாட்டமே!
 இமயமலைக் காடுகளில் ஏராளமாக விளையும் கஞ்சாவுக்கு இந்தியாவில் தடை என்பதால் இந்தியாவுக்கு வந்த ஹிப்பிக்கள் "தம்மாறோ தம்' அடித்து "ஹரே கிருஷ்ணா ஹரே ராமா' என்று பாடிவிட்டுக் கூடவே விதைகளை அள்ளிக் கொண்டு போய் மெக்சிகோ, பெரு, பிரேசில் நாடுகளில் பயிராக்கி வளமாக்கிவிட்டனர்.
 இப்படிப்பட்ட அருமை பெருமையுள்ள கஞ்சா மிக அற்புதமான புற்றுநோய் மருந்து என்று அண்மையில் தெரியவந்துள்ளது.
 கஞ்சாவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட "துரோணாபினால்' (ஈழ்ர்ய்ஹக்ஷண்ய்ர்ப் நபிலோன் (சஹக்ஷண்ப்ர்ய்ங்) மருந்துகள் அமெரிக்காவில் புற்றுநோயாளிகளுக்கும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் வழங்கப்பட்டு நோயிலிருந்து அவர்கள் விடுதலை பெற்று வருவதாக செய்தி.
 புற்றுநோயாளிகளின் புண்களில் செல்கள் வளர்வதால் புண் ஆறுவது இல்லை. புற்றுள்ள பகுதிக்கு ரத்தம் செல்லும்போது செல்கள் வளர்கின்றன.
 கஞ்சா மருந்தை வழங்கும்போது, புற்றில் ரத்த ஓட்டம் தடையுற்று புற்று செல்கள் வளர்வதில்லை. புற்றுநோய் ரண சிகிச்சையின்போது ஏற்படும் வாந்தி, தலை சுற்றலையும் கஞ்சா மருந்து கட்டுப்படுத்திவிடுகிறது. எய்ட்ஸ் நோயாளிகளின் தலையாய பிரச்னை பசியின்மை. இந்த மருந்துகள் பசியை ஏற்படுத்தி சிவப்பு ரத்த அணுக்களையும் வளர்க்க ஏதுவாகின்றன.
 அண்மையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அபின் சாகுபடியில் உள்ள முட்டுக்கட்டைகளை நீக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளதை அடுத்து, கஞ்சாவின் புற்றுநோய் மருந்துகள் பற்றிய செய்திகள் வந்துள்ளன. இது புதிய செய்தி.
 அதேசமயம், கார்த்திகைக் கிழங்கு, சர்ப்பகந்தா, நித்திய கல்யாணி போன்ற மூலிகைகளிலும் உயிர் காக்கும் மருந்துகள் உள்ளனவென்பது பழைய செய்தி. அபினியும் அவ்வாறே. இப்படிப்பட்ட அரிய மருந்துகள் அடங்கிய மூலிகைகளை மலிவாக ஏற்றுமதி செய்து ஏமாளிகளாக எவ்வளவு காலம் வாழ்வது?
 இந்திய மருத்துவ முறைகளில் சுமார் 2,000 மருந்துகள் உண்டு. 200 மருந்துகள் தாது உலோகங்களிலிருந்தும் 200 மருந்துகள் பிராணிகளிலிருந்தும் பெறப்படுவது போக, 1,600 மருந்துகள் மூலிகைகளிலிருந்து பெறப்படுகின்றன.
 அதேசமயம், நம்மிடம் மூலப்பொருள்களில் உள்ள ரசாயனத்தைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் இருந்தும் அதைப்பற்றி யோசிக்காமல் சுவடிகளில் கூறியபடி மூலிகைகளை அப்படியே பயன்படுத்துகிறோம். சக்கையை நீக்கி சாரத்தை எடுக்காமல், சாரத்தை நீக்கிவிட்டு சக்கையைப் பயன்படுத்துகிறோமோ?
 இந்திய மூலிகைகளில் உள்ள மருந்து ரசாயனத்தைத் தனியே பிரித்தெடுக்கும் யோசனை கூட நம்மிடம் இல்லை.
 தென்னைக்குத் தனி வாரியம் உண்டு. பனைக்கு வாரியம் இல்லை. நறுமணப் பொருள்களுக்கு வாரியம் உண்டு. மூலிகைகளுக்கு வாரியம் இல்லை. ஏன்? வருமானத்தை அள்ளித்தரக் கூடிய துறை கவனிப்பாரற்றுப் போய்விட்டது.
 நமது முதல் தேவை, அகில இந்திய அளவில் மூலிகை வாரியம் ஒன்றை நிறுவி உயிர் காக்கும் மருந்துகளுக்கான மூலப் பொருள்களின் மருந்து ரசாயனத்தைப் பிரித்தெடுத்து ஆய்வு செய்து புதிய கண்டுபிடிப்புகள் செய்து ஏற்றுமதி செய்வதுதான்.
 அபின், கஞ்சா போன்ற மூலிகை சாகுபடியை விரிவாக்கம் செய்து அதேசமயம் இந்திய நார்கோடிக் கமிஷனுக்கு அதிக அதிகாரம் வழங்கி தவறான பயனைக் கட்டுப்படுத்தும் அளவில் தண்டனை அளவை உயர்த்தலாம்.
 இந்திய மருத்துவர் நிபுணர் குழு நிறுவப்பட்டு மூலிகை வாரியத்தின் செயல்திட்டம் வரையப்பட்டு அதன் தலைமைப் பீடத்தைத் தமிழ்நாட்டு மாநகரங்களுக்குள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வழங்குவது சிறப்பாக இருக்கும்.
 மூலிகைகளுக்கெல்லாம் முதல்வராகப் போற்றப்படுபவர் அகத்தியர். திராவிடப் பொன்னாட்டில் தமிழை வளர்த்தவரும் அகத்தியர்.
 தமிழுக்காகப் போராடுவோர், அகத்தியர் பெயரில் தமிழ்நாட்டில் ஒரு மூலிகை வாரியம் உருவாக்கப்பட வேண்டுமென்று போராடினால் அவர்களுக்கும் பெருமை; தமிழ்நாட்டுக்கும் பெருமை.
 
 கட்டுரையாளர்:
 இயற்கை விஞ்ஞானி.
 
 

முழு கட்டுரையைப் படிக்க →