நடுப்பக்கக் கட்டுரைகள்

யானை பலத்துடன் அஜீத் ஜோகி

சத்தீஸ்கர் அரசியலில் தற்போது பரபரப்பாகி இருக்கும் செய்தி, அந்த மாநில முன்னாள் முதல்வர் அஜீத் ஜோகியுடன் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூட்டணி அமைத்திருப்பது.

மணிகண்டன் தியாகராஜன்

சத்தீஸ்கர் அரசியலில் தற்போது பரபரப்பாகி இருக்கும் செய்தி, அந்த மாநில முன்னாள் முதல்வர் அஜீத் ஜோகியுடன் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூட்டணி அமைத்திருப்பது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிúஸாரம் ஆகிய மாநிலங்களுடன் சத்தீஸ்கரிலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
சத்தீஸ்கரில் முதல்வர் ரமண் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் கடந்த 2000-ஆம்  ஆண்டில் பிரிக்கப்பட்ட பின்னர், மாநிலத்தின் முதலாவது முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அஜீத் ஜோகி பொறுப்பேற்றார்.
2003-ஆம் ஆண்டு வரை முதல்வர் பதவியில் அவர் நீடித்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் பாஜகவின் ரமண் சிங் முதல்வராகப் பதவியேற்றார். 
அப்போது முதலே ரமண் சிங் சத்தீஸ்கரில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்து வருகிறார்.
வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில் பாஜக பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்கிற முனைப்புடன் மாநில வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
மொத்தம் 91 சட்டப்பேரவை உறுப்பினர்களை ( நியமன உறுப்பினர் ஒருவர் உள்பட) கொண்ட சத்தீஸ்கரில், 39 எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தில் காங்கிரஸ் கட்சி  தற்போது உள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 49 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது.
எனினும், அந்தத் தேர்தலில் இரு பெரிய கட்சிகளும் சரிசமமான விகிதத்திலேயே வாக்குகளைப் பெற்றிருந்தன.
காங்கிரஸýடன் விரோதப் போக்கு: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, தன்னையும், தனது மகன் அமித் ஜோகியையும் கட்சியை விட்டு காங்கிரஸ் நீக்கியதால் அதிருப்தி அடைந்த அஜீத் ஜோகி, "சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ்' என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.
"பாஜகதான் எனக்கு முதல் எதிரி' என்று அஜீத் ஜோகி கூறினாலும், காங்கிரஸிடம் கடுமையான போக்கையே அவர் கடைப்பிடித்து வருகிறார்.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் அவர் மிக கவனமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி பதவி வகித்த காலத்திலேயே சத்தீஸ்கரில் தனி கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.
நாட்டிலேயே மிகப்பெரிய கட்சிக்குத் தலைவராகிவிட்ட நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களின் வெற்றிகள் அவரது அரசியல் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானவை.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்திக்கு, மாயாவதியின் செயல் சற்று அதிர்ச்சியை அளித்திருக்கும் என்பதில் வியப்பில்லை.
2018 சத்தீஸ்கர் தேர்தலில் அஜீத் ஜோகியுடன் பகுஜன் சமாஜ் கட்சி (சின்னம்-யானை) கூட்டணி அமைத்துள்ளது.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஓரிடத்தில் மட்டுமே பகுஜன் சமாஜ் வெற்றி பெற்றது. புதுக் கூட்டணியுடன் இந்தத் தேர்தலை சந்திக்க உள்ள அக்கட்சி 35 இடங்களில் போட்டியிடுகிறது. ஜோகியின் கட்சி 55 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணி வெற்றி பெற்றால் அஜீத் ஜோகிதான் முதல்வர் என்று மாயாவதி அறிவித்துவிட்டார்.
மாயாவதியின் இந்த நடவடிக்கையால் மற்ற மாநிலத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணியை எதிர்பார்க்க முடியாது என்று காங்கிரஸ் முடிவு செய்துவிட்டதாக நாம் ஊகித்துக் கொள்ளலாம்.
ஜோகி-மாயாவதி கூட்டணியைத் தங்களுக்கு சாதகமாகவே சத்தீஸ்கர் மாநில பாஜக பார்க்கிறது. பரம எதிரியான காங்கிரûஸ வீழ்த்த இவர்களின் கூட்டணியை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என அக்கட்சி கணக்கு போட்டு வருகிறது.
சத்தீஸ்கரில் பாஜக ஆட்சியில் சில குறைபாடுகள் இருந்தாலும், ரமண் சிங்குக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்பட்டு வருவதாக அந்த மாநில ஊடகச் செய்திகளில் காண முடிகிறது.
ஜோகி-மாயாவதி கூட்டணி, பாஜகவின் சூழ்ச்சி என்று குற்றம்சாட்டும் காங்கிரஸ், சத்தீஸ்கர் தேர்தலில் 
வெற்றி பெறுமா? பாஜக இந்தக் கூட்டணியையும், காங்கிரûஸயும் எப்படி எதிர்கொள்ளப் போகிறது? இவற்றையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

SCROLL FOR NEXT