சிறப்புக் கட்டுரைகள்

மாரடைப்பு, பக்கவாதம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் ஒலிமாசுபாடு

தொடர்ந்து அதிக சத்தத்தினை கேட்டுக்கொண்டிருந்தால் இரத்தத்தில் கொலஸ்ட்டிராலின் அளவு அதிகரித்து அதனால் நிரந்தரமாக இரத்தக்குழாய்கள் சுருங்கி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது.

வழக்கறிஞர் சி.பி. சரவணன்


மாசு என்பது சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை சுற்றுப்புறத்தில் வெளியிடுவதாகும். பொதுவாக மனிதனின் செயல்பாடுகளால் சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவிக்கப்படும் பொருட்களை வெளியிடுவதே மாசுபடுதல் என்கிறோம். மனிதனின் நடவடிக்கைகளால் சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை வெளியிடுவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளையே மாசுபடுதல் என்று அறியப்படுகிறது.

மாசுபாட்டின் வகைகள்

  • நிலம் மாசுபாடு
  • நீர் மாசுபாடு
  • காற்று மாசுபாடு
  • ஒலி மாசுபாடு
  • வெப்பம் மாசுபாடு
  • கதிரியக்கம் மாசுபாடு

டெசிபல்(decibel) முறையின் ஒலியின் அளவானது அளவீடப்படுகிறது. டெசிபல் – 10 ல் ஒன்று ஒரு பெல்லாகும். அதாவது ஒரு பெல் இரண்டு திண்ணத்திற்கு இடையேயுள்ள வேறுபாடாகும் (1,10). ஒரு பெல் மற்றொன்றை விட பத்துமடங்கு பெரியதாகும். திண்ணத்தின் அளவானது இரண்டு வெவ்வேறு திண்ணத்தின் ஒப்பீடாகும். 

அதாவது,

திண்ணத்தின் அளவு – decibel photo 

உதாரணமாக இரண்டு செறிவுகளான 10.8 வாட்ஸ் / மீட்டர்2 மற்றும் 10.4 வாட்ஸ் / மீட்டர்2 இரண்டிற்கும் இடையேயுள்ள வேறுபாடு 10,000 யூனிட்களாகும். இதனை 4 பெல்கள் அல்லது 40 டெசிபல்கள் என்றும் கூறலாம்.

ஒலியினால் ஏற்படும் டெசிபலின் அளவின் உதாரணங்கள் பின்வருமாறு:


ஒலி மாசுபாடு


ஒலி மாசுவிற்கு  முக்கியமான ஆதாரங்கள்

  • சாலை போக்குவரத்து இரைச்சல்
  • விமான இரைச்சல்
  • இரயில் இரைச்சல்
  • அக்கம் பக்கம் மற்றும் வீட்டின் ஒலி
  • ஏற்றதற்ற நிலத்தின் பயன்பாடு
  • தொழிற்சாலை இரைச்சல்

ஒலி மாசுபாட்டின் விளைவு

90 டெசிபல்களுக்கும் அதிகமான ஒலி தொடர்ந்து மனிதர்கள் கேட்கும்பொழுது அது கேட்கும் திறனை பாதிப்பதுடன், நரம்பு மண்டலத்தில் நிரந்தர பாதிப்பையும் ஏற்படுத்தும். நகரங்களில் அதிகபட்ச ஒலி அளவு 45 டெசிபல்கள் – க்குள் இருத்தல் வேண்டும் என உலக சுகாதார அமைப்பு நிர்ணயத்துள்ளது. இந்தியாவிலுள்ள பெருநகரங்களில் சராசரியாக கேட்கப்படும் ஒலியின் அளவு 90 டெசிபல்களுக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே சத்தம் அதிகமான நகரங்களில் மும்பை மூன்றாம் இடத்திலுள்ளது. புது தில்லியும் இதற்கு பின் பட்டியலிடப்பட்டுள்ளது.

  • அதிகப்படியான சத்தம் மனிதர்கள் எரிச்சலடையச் செய்வது மட்டுமல்லாமல், இரத்தத் தமனிகளை சுருங்கச்செய்வதால், அதிகப்படியான அட்ரீனலின் ஹார்மோன் சுரக்க தூண்டுகிறது. இதனால் இதயம் அதிக அளவு வேலை செய்யத் தூண்டப்படுகிறது.
  • தொடர்ந்து அதிக சத்தத்தினை கேட்டுக்கொண்டிருந்தால் இரத்தத்தில் கொலஸ்ட்டிராலின் அளவு அதிகரித்து அதனால் நிரந்தரமாக இரத்தக்குழாய்கள் சுருங்கி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது.
  • அதிக ஒலி அலை அதிர்வினால் கேட்கும் திறனின் உணர்வு குறைகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் போது மனிதனின் கேட்கும் திறனானது பாதிக்கப்பட்டு திறனை இழந்துவிடுகின்றனர்.
  • ஒலி / இரைச்சலினால் மனிதனின் அனச்சுரப்பி, நரம்பு, செரிமானம் மற்றும் இரத்த நாடி போன்ற தொகுதிகள் பாதிக்கிறது. ஏற்றுக்கொள்ளவும் மற்றும் பொறுத்து பழகிக் கொள்ளும் தன்மைகள் இருந்தாலும் அதிகமான தாக்கத்தின் போது செரிமானம் மற்றும் இரத்த நாடி போன்ற பகுதிகள் மற்றும் இரைச்சலை ஏற்றுக்கொள்ளும் பகுதிகளிலும் நோய்கள் தாக்குகிறது.
  • இரைச்சலானது மனிதனின் உணர்வுகள் மற்றும் செயல்கள் போன்றவற்றை பாதிக்கிறது. கோபம், மன அழுத்தம் மற்றும் அதிக இரத்த அழுத்தம் போன்ற அறிகுறிகள் ஒலி மாசுபாட்டினால் மனிதனுக்கு ஏற்படுவையாகும்.
  • ஒலி அளவின் தலையீட்டால் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டு உற்பத்தியில் இழப்பீடு ஏற்படுகிறது.
  • ஏற்றுக்கொள்ளதக்காத இரைச்சல் அல்லது ஒலியினால் மனிதனுக்கு உடலில் சோர்வும், தலைவலியும், ஏற்படுகின்றது.

சட்டம் சொல்வதென்ன?
ஒலி மாசு (ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) விதிகள், 2000 

மண்டல/பகுதி வாரியான சுற்றுச்சூழல் ஒலிதர அளவுகள் [பிரிவு.3] 
[Ambient Air quality standards]

1. சுற்றுப்புற ஒலியின் தர அளவீடுகள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.
2. மாநில அரசானது தொழிற்சாலை பகுதி, வணிக பகுதி, குடியிருப்புப் பகுதி, அமைதிப் பகுதி என ஒலி அளவீடுகள் மண்டலங்களாக/பகுதிகளாக பிரிக்கப் பட வேண்டும்.
3.  வாகன ஓட்டம், ஹார்ன் ஒலி, பட்டாசு வெடித்ததால் வரும் சத்தம், ஒலி பெட்டிகள், மக்கள் மேடை அமைப்புகள், ஒலி எழுப்பும் கருவிகள்  போன்றவற்றிலிருந்து வரும் ஒலிகள் குறிப்பிட்ட அளவீடுகள் மீறாமல் மாநில அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.
4. நகர்புற திட்ட இயக்கமோ, உள்ளாட்சி அமைப்புகளோ, நகர்புற திட்டமிடுதலின் போது ஒலி மாசுபாட்டை கவனத்தில் கொண்டு, அறிவுறுத்தப்பட்ட ஒலி அளவீட்டை பராமரிக்க வேண்டும்.
5. மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள் அமையப்பட்டுள்ள இடங்களிலிருந்து 100 மீ சுற்றளவு வரை அமைதிப்பகுதியாக (Silent Zone) அறிவிக்க வேண்டும்.

ஒலி மாசுபாட்டை செயல்படுத்துவதற்கான பொறுப்புகள் [பிரிவு 4]

1. எந்த பகுதியோ/மண்டலமோ அறிவுறுத்தப்பட்ட ஒலி அளவீட்டிற்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. மாவட்ட மாஜிஸ்ட்ரேட், காவல் ஆணையர் போன்ற அதிகாரிகள் ஒலி அளவீட்டை அமல்படுத்துவதில் பொறுப்பாளர் ஆவர்.
3. ஒவ்வொரு  மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஒலி மாசு சார்ந்த தொழில்நுட்ப மற்றும் புள்ளியியல் விவரங்களை வெளியிடுவதுடன், அதைத் தடுக்கும் முறைகளை பதிவு செய்தல் வேண்டும்.

பொது மேடைகளில் ஒலிப்பெட்டிகளை கட்டுப்படுத்தும் முறைகள் [பிரிவு 5]

1. அதிகாரிகளின் அனுமதியின்றி ஒலிப்பெட்டிகளை பயன்படுத்தக் கூடாது.
2.ஒலிப்பெட்டி, பொதுமேடை அமைப்பு, ஒலிப்பெருக்கும் கருவி, உபகரணங்கள், இசைக்கருவி, ஆர்மோனியம் போன்றவற்றை மூடிய அமைப்புகள், கன்பரஸ் ஹால், சமூக கூடம் பொது அவசரம் தவிர மற்ற இடத்தில், இரவு நேரத்தில் பயன்படுத்தக் கூடாது. 
3.கலாச்சார மற்றும் மதசார்பான விழாக்காலங்களில் குறிப்பிட்ட நேரம் வரை (இரவு 10.00 முதல் 12.00 வரை)வருடத்தில் 15 நாட்களுக்கு மிகாமல் மாநில அரசு அனுமதிக்கலாம். மாநில அரசு விதிவிலக்கு காலங்கள் எப்பொழுது என்பதை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும்.
4. ஒலிப்பெட்டியோ, இசைக்கருவியோ 10 dB அல்லது சுற்றுச் சூழல் ஒலியாக 75 dB, இதில் எது குறைவோ அதற்குள் இருக்க வேண்டும்.
5. தனியார் இடமாக இருக்கும்பட்சத்தில் ஒலி அமைப்புகள் 5 dB க்கு குறைவாக இருக்க வேண்டும்.

ஹார்ன், ஒலி ஏற்படுத்தும் கட்டுமான உபகரணங்கள் மற்றும் பட்டாசுகள் மீதான ஒலிக் கட்டுப்பாடு  [பிரிவு 5A]
1. அமைதி மண்டலத்திலும் குடியிருப்பு பகுதியில் இரவிலும், அவசர காலம் தவிர ஹார்ன் பயன்படுத்தக் கூடாது.
2. அமைதி மண்டலத்தில் ஒலி ஏற்படுத்தும் பட்டாசுகளை  பயன்படுத்தக் கூடாது.
3. அமைதி மண்டலத்திலும் குடியிருப்பு பகுதியில் இரவில் கட்டுமான உபகரணங்கள், உபயோகிப்பதோ, இயக்குவதோ கூடாது.

விதிமீறலுக்கான விளைவுகள் [பிரிவு 6]
ஒவ்வொரு அமைதி மண்டலம்/ குரிப்பிட்ட பகுதியில் பின்வரும் குற்றங்கள செய்தால் தண்டனைக்கு உள்ளாவார்.
1.இசை அல்லது ஒலிப்பெட்டியை பயன்படுத்தினாலோ
2.ஹார்ன் அடித்தாலோ, ட்ரம்ஸ், டிரம்பட் வாசித்தாலோ
3.கூட்டத்தை கவரும், மைம்ஸ், இசை, வேறு கருவிகள் பயன்படுத்தினாலோ
4.சத்தத்தை ஏற்படுத்தும் பட்டாசுகள் வெடித்தாலோ
5.ஒலிப்பெட்டிகள் அல்லது மக்கள் மேடை அமைப்பு பயன்படுத்தினாலோ
தக்க அலுவலரிடம் புகார் அளித்தல் [பிரிவு 7]

1. அறிவுறுத்தப்பட்ட அளவீடான 10 dB க்கு அதிகமாகவோ, குறிப்பிட்ட மண்டலத்திற்கு அதிகமான ஒலி அளவீட்டை, இரவில், குறிப்பிட்ட அளவீட்டுக்கு மேல் வெளிப்படுத்தும் எந்த நபர் மீதும்,
2. அலுவலர் கொடுக்கப்பட்ட புகார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஒலி அல்லது இசையை தடுப்பதற்கான அதிகாரம்  [பிரிவு 8]
காவல் அலுவலர், தொந்தரவு, நச்சரிப்பு, அசௌகரியம் அல்லது அவை விளைவிக்கும் சூழலை திருப்தியென நினைக்கும் அலுவலர், ஒரு நபர் மீதோ, உரிமையாளரை தடுக்கவோ, முன்னெச்சரிக்கை செய்யவோ, கட்டுப்படுத்தவோ, ஒழுங்குபடுத்தவோ தக்க ஆணை பிறப்பிப்பார்.

a) இச்சம்பவம் தொடரும் போது
I. வாய்ப்பாட்டு அல்லது வாத்திய இசை
II. வாசித்தல், அடித்தல், மோதுதல், ஊதுதல், போன்றவற்றை தரும் ஒலிப்பெட்டிகள், பொது மேடை அமைப்புகள், பொருள்கள், ஹார்ன், ஒலி ஏற்படுத்தும் கட்டுமானக் கருவிகள், உபயோகப் பொருள்கள், 
III. பட்டாசு வெடித்தலால் ஏற்படும் ஒலி
b) எந்த வளாகத்திலும் வியாபாரம் காரணமாக ஏற்படும் ஒலி.

2. உட்பிரிவு-1 இன் படி அதிகாரிக்கு உத்தரவை திரும்பப் பெறவோ, மாற்றவோ அதிகாரமுள்ளது.

வரம்புரையாக, புகாரை வைக்கும் முன்னரே மனுதாரரை அல்லது அவரின் பிரதிநிதியை ஆஜர்படுத்தவும், புகாரை ஏற்றுக் கொள்ளவும், நிராகரிக்கவும் அதிகாரம் உண்டு. நிராகரிக்கும்பட்சத்தில் காரணங்களை பதிவு செய்ய வேண்டும்.

குறிப்பு
1. பகல் நேரம் என்பது 6.00 முதல் 10.00 மணி வரை
2. இரவு நேரம் என்பது 10.00 முதல் காலை 6.00 மணி வரை
3. அமைதிப்பகுதி என்பது மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள் அமையப்பட்டுள்ள இடங்களிலிருந்து 100 மீ சுற்றளவு வரை ஆகும்.
4. மேலும், மேலே கூறப்பட்டுள்ள வகையில் ஒன்றுக்கு மேற்பட்ட கலந்த பகுதிகளை தகுதி வாய்ந்த அலுவலர் அறிவிக்கலாம்.

பட்டாசுகளுக்கான ஒலி அளவீடு

A. (i) 4 மீட்டர் தொலைவில் வெடிக்கும் பொழுது 125 dB(AI) அல்லது 145 dB(C)pk ஒலி அளவுக்கு அதிகமாக வரும் பட்டாசுகளை தயாரிப்பதோ, விற்பதோ, வெடிப்பதோ கூடாது.

(ii) தொடர் வெடி/சரவெடி பொறுத்தவரை 5 log10(N) dB அளவீட்டில் இருக்க வேண்டும். [N= பட்டாசுகளின் எண்ணிக்கை]

B.பட்டாசு வெடிப்பதற்கான தேவைகள்
I. 5 மீட்டர் விட்டம் அல்லது அதற்கு சமமான அளவுள்ள கெட்டியான கான்கிரீட் தளம்
II. 15 மீட்டர் இடைவெளிக்கு எதிரொலிக்கும் தளமோ மற்ற ஏதுமில்லாத இடமாக இருக்க வேண்டும்
III. ஒலி அளவு மீட்டர் கொண்டு அளக்கப்பட்டிருக்க வேண்டும்
C. வெடிபொருட்கள் துறை இவ்விசயங்களை உறுதி செய்திருக்க வேண்டும்
D.ஏற்றுமதி செய்யப்படும் பட்டாசுகளுக்கு A,B,C பொருந்தாது, ஆயினும் பின் வரும் விசயங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்
I. ஏற்றுமதி ஆணை, ஏற்றுமதி செய்யப்படும், பட்டாசுகள் ஏற்றுமதி செய்யப்படும் நாட்டின் ஒலி அளவீடுகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும்
II. பேக் செய்யப்படும் போது வெவ்வேறு வண்ணங்களில் இருக்க வேண்டும்.

ஒலி மாசுபாட்டினை தடுக்கும் எளிய வழிகள்

  • அதிக ஒலி எழுப்பும் தொழிற்சாலைகள், உற்பத்தி இடங்கள் போன்ற இடங்களில் ஒலியைக் கட்டுப்படுத்தும் அறைகளை கட்ட ஊக்குவிக்க வேண்டும்.
  • வீடுகளில் ஒலி எழுப்பும் கருவிகளை படுக்கை அறை மற்றும் வசிப்பறையை விட்டு தள்ளி அடித்தளத்தில் அல்லது வெளிப்புறத்தில் அமைக்க வேண்டும்.
  • வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் எச்சரிக்கை ஒலிப்பான்களையும், சேதமடைந்த எச்சரிக்கை ஒலிப்பான்களையும் தடை செய்ய வேண்டும்.
  • ஒலி மாசுபாட்டினை உண்டாக்கும் தொழிற்சாலைகள், பேருந்து மற்றும் சாலைப் போக்குவரத்து வாகனங்களின் நிலையங்கள், தொடர் வண்டி நிலையங்கள் போன்றவற்றை மக்கள் வசிப்பிடங்களை விட்டு தொலைவில் அமைக்க வேண்டும்.
  • பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு அருகில் அமைதி மண்டலங்களை ஏற்படுத்த சமூகச் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
  • பொது இடங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தடை செய்ய சட்டங்கள் இயற்றி அவற்றை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
  • வீடுகளில் தொலைக்காட்சிகள், வானொலிகள், இசை அமைப்புகளின் ஒலிகளைக் குறைப்பது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும் என்பதனை உணர்ந்து எல்லோரும் செயல்பட வேண்டும்.
  • தேவையானபோது மட்டுமே காரில் ஒலிப்பானை உபயோகிக்கவும்
  • ஒலிபெருக்கிகள் உபயோகிப்பதைத் ஊக்குவிக்கக்கூடாது
  • மேளம், பட்டாசுகள் போன்றவற்றை திருமண ஊர்வலங்களில் உபயோகிப்பதைக் குறைக்கவும்
  • ஒலி மாசுபாட்டினைக் கட்டுப்படுத்த சட்டத்தினை முறையாக பின்பற்றவும்
  • ஒலி மாசுபாட்டினை உட்கிரகிக்கவும், தடுக்கவும் குடியிருப்பு பகுதி மற்றும் நகரப் பகுதி போன்றவற்றை பசுமை நகரமாக மாற்றுவது அதாவது மரங்களை நடுவது 
  • ஒலி மாசுபாட்டினை குறைப்பது ஒவ்வொருவரின் தலையாயக் கடமை என்பதனை உணர்ந்து ஒலி மாசில்லா சுற்றுச்சூழலை உருவாக்கி, சிறந்த நகர்புறத் திட்டமிடுதல் மூலம் ஒலி மாசில்லா நகரத்தினை உருவாக்கலாம்.

C.P.சரவணன், வழக்கறிஞர்
செல்பேசி : 9840052475

References:

1. The Noise Pollution (Regulation and Control) Rules, 2000

2. (The Noise standards for fire-crackers were notified by the Environment (Protection) (Second Amendment) Rules, 1999 vide G.S.R.682(E), dated the 5th October, 1999 and inserted as serial no. 89 of Schedule I of the Environment (Protection) Rules, 1986. 

3. Subsequently these Rules were amended by the Environment (Protection) Second Amendment Rules, 2006 vide G.S.R. 640(E), dated the 16th October, 2006, under the Environment (Protection) Act, 1986)

4. Environment (Protection) Amendment Rules, 2000, vide G.S.R. 742 (E), dated 25th September, 2000 and inserted as serial no. 93 of Schedule I of the Environment (Protection) Rules, 1986. 
5. Environment (Protection) Amendment Rules, 2002, vide G.S.R. 849 (E), dated 30th December, 2002 and the Environment (Protection) Amendment Rules, 2005, vide G.S.R. 272 (E), dated 5th May, 2005, under the Environment (Protection) Act, 1986)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT