சிறப்புக் கட்டுரைகள்

265 பேர் பலி; 8 லட்சம் பேர் இன்னமும் நிவாரண முகாம்களில் - களைகட்டாத ஓணம்!

தினமணி


திருவனந்தபுரம் : வெண்பட்டு நிறத்திலான ஆடைகள் அணிந்து அத்தப்பூக் கோலங்களுடன் வழக்கமான உற்சாகக் கொண்டாட்டத்துடன் கலைகட்டும் ஓணம் பண்டிகை இந்த முறை அவ்வளவு மகிழ்ச்சியை அளிக்கவில்லை.

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட கன மழை மற்றும் வெள்ளத்தால் 265 பேர் பலியாகினர். சுமார் 8 லட்சம் பேர் இன்னமும் நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனர். வீடிழந்து, உறவுகளை இழந்து கண்ணீர் கடலில் தத்தளிக்கும் அவர்களால் ஓணம் பண்டிகையை எப்படிக் கொண்டாட முடியும்?

ஆலப்புழா மாவட்டத்தின் நீதிமன்ற வராண்டாவில் இருக்கும் தரைவிரிப்பை இரண்டு பேராகச் சேர்ந்து தூக்கி சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

82 வயதாகும் குமாரி கூறுகையில், இந்த ஓணம் பண்டிகையை கொண்டாட முடியாமல் போகும் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இன்று திரு வோணம். ஆனால் நாங்களோ நிவாரண முகாம்களில் இருக்கிறோம். எதிர்பாராத மழையும் வெள்ளமும் எங்களது வீடுகளை அடித்துச் சென்றுவிட்டது என்கிறார்.

குமாரியைப் போல 8 லட்சம் கேரள மக்கள் வீடு, நிலங்களை இழந்து நிவாரண முகாம்களில்தான் இன்னமும் தங்கி உள்ளனர். 

நிவாரண முகாமாக மாறிய மசூதி ஒன்றில் இன்று ஓணம் பண்டிகைக் கொண்டாடப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற மசூதியின் வாசல்கள் திறக்கப்பட்டன. ஏராளமான பெண்களும் குழந்தைகளும் மசூதியிலேயே தங்கியிருக்கும் நிலையில் இன்று சிறிய அளவில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது.

நாட்டையே துண்டாடிய வெள்ளம், மத வேறுபாடுகளை மறந்து மக்களின் ஒற்றுமையை ஓங்கச் செய்திருப்பதை மட்டுமே இந்த நன்னாளில் நினைவு கூற வேண்டும்.

வெள்ளத்தில் நனைந்த புத்தகங்களை சூரிய வெளிச்சத்தில் காய வைத்துக் கொண்டிருந்த நந்தனா கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த முறை பூக்கோலம் கூட கிடையாது என்கிறார்.

பேரிடராக மாறிய இந்த வெள்ளத்தால் எங்கெங்கோ இருந்த மக்களை ஒன்றாக இணைத்து நிவாரண முகாம்களில், ஓணம் பாட்டுப் பாடியும், ஓணம் சமையல் செய்தும் சில நிவாரண முகாம்களில் தங்களது குறைந்தபட்ச மகிழ்ச்சியைக் கொண்டு வரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

அலுவா யுசி கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரண முகாமில் பெண்களும் ஆண்களும் காய்கறிகளை நறுக்குவதில் தீவிரமாக இருந்தனர். முஸ்லிம் பெண்களும் சேர்ந்து பூக்கோலம் போட்டுக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT