முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

மத்திய அரசு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது: திருநாவுக்கரசர்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளதாக தமிழ்நாடு

Updated On : 29 மார்ச், 2018 at 5:41 PM
பகிர்:

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார். 

காவிரி விவகாரத்தில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. இதில் காவிரி நீரை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு திட்டத்தை மத்திய அரசு 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மத்திய அரசு செயல்படுகிறது.  தேர்தலுக்காக காவிரி வாரியத்தை அமைப்பதை நிறுத்த வேண்டியதில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளபோது, உச்சநீதிமன்றம் கொடுத்த காலக்கெடு முடிந்துள்ள நிலையிலும் மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு முடிவும் அறிவிக்கப்படாமல் உள்ளது.

இதன் மூலம் மத்திய அரசு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.