சிறப்புக் கட்டுரைகள்

புதிய மாவட்டங்கள் நிர்வாகச் சீர்திருத்தமா? நிர்வாகத் திறமையின்மையா ?

தமிழகத்தின் மொத்த பரப்பளவு 1 லட்சத்து 38 ஆயிரத்து 568 சதுர கிமீ ஆகும். சுதந்திரத்தின் போது இந்தியாவில் மாநிலங்களில்லை,

வழக்கறிஞர் சி.பி. சரவணன்


தமிழகத்தின் மொத்த பரப்பளவு 1 லட்சத்து 38 ஆயிரத்து 568 சதுர கிமீ ஆகும். சுதந்திரத்தின் போது இந்தியாவில் மாநிலங்களில்லை, அதற்கு பதிலாக மாகாணங்களாக இருந்தது. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா வெள்ளையர்களிடமிருந்து விடுதலை அடைந்தபோது, மெட்ராஸ் மாகாணம், மெட்ராஸ் மாநிலமாக மாறி பின் 1967ஆம் ஆண்டில் தமிழ்நாடு என பெயர் வைக்கப்பட்டது. விடுதலை அடைந்தபோது மெட்ராஸ் மாநிலத்திலிருந்த மாவட்டங்கள் எண்ணிக்கை 13 மாவட்டங்கள்தான். மெட்ராஸ், செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாநிலங்கள்தான் அவை.
 
இதனை அடுத்துதான் 13 மவட்டங்களாக இருந்தது, ஒவ்வொரு காலகட்டத்திலும் பிரிக்கப்பட்டு தற்போது 33 மாவட்டங்களாக மாறியிருக்கிறது. எந்த காலத்தில் எங்கிருந்து மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது என்று பார்ப்போம்.
 
இந்த 13 மாவட்டங்களை அடுத்து முதன் முதலாக பிரிந்த மாவட்டம் என்றால் சேலம் மாவட்டம்தான். 1965ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்திலிருந்து சேலம் மாவட்டம் தனியாக பிரிந்தது. 1967-இல் அண்ணாவின் ஆட்சியில் காஞ்சிபுரம் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது.

பின், திருச்சியிலிருந்து மூன்று மாவட்டங்கள் பிரிந்துள்ளது. இதில் முதன் முதலாக பிரிந்த மாவட்டம் எது என்று பார்த்தால் புதுக்கோட்டை மாவட்டம் தான். இது 1974 தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. 1979ஆம் ஆண்டு கோயம்பத்தூரிலிருந்து பிரிக்கப்பட்டது ஈரோடு.
 
1985ஆம் ஆண்டு மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. இதே ஆண்டில் மதுரையிலிருந்து திண்டுக்கல் பிரிக்கப்பட்டுள்ளது. 1986ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி பிரிக்கப்பட்டுள்ளது. 1989ஆம் ஆண்டில் வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை, வேலூர் என்று இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன.1991ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து நாகப்பட்டினம் பிரிக்கப்பட்டது. பின்னர் 1996ஆம் ஆண்டில் நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது.
 
1993ஆம் ஆண்டில்தான் தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் என்று இரண்டு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. 1995ஆம் ஆண்டில் திருச்சியிலிருந்து கரூர் மற்றும் பெரம்பலூர் என மேலும் இரண்டு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. 1996ஆம் ஆண்டில் மதுரையிலிருந்து தேனி பிரிக்கப்பட்டது. 1997ல் சேலத்திலிருந்து நாமக்கல் பிரிக்கப்பட்டது.

2004ல் தர்மபுரியிலிருந்து கிருஷ்ணகிரி பிரிக்கப்பட்டது. 2007ல் பெரம்பலூரிலிருந்து அரியலூர் பிரிக்கப்பட்டது. 2009ல் கோயம்புத்தூர் மற்றும் ஈரோட்டிலிருந்து திருப்பூரி என்ற மாவட்டம் பிரிக்கப்பட்டது.
 
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் புதிய மாவட்டங்கள் எதுவும் உருவாக்கப்படாத நிலையில், 


1. சென்னை, 2. காஞ்சீபுரம், 3. திருவள்ளூர், 4. திருவண்ணாமலை, 5. வேலூர், 6. விழுப்புரம், 7. கடலூர், 8. அரியலூர், 9. பெரம்பலூர், 10. திருச்சி, 11. புதுக்கோட்டை, 12, தஞ்சாவூர், 13. நாகப்பட்டினம், 14. திருவாரூர், 15. சேலம், 16. தருமபுரி, 17. கிருஷ்ணகிரி, 18. நாமக்கல், 19. கரூர், 20. ஈரோடு, 21. திருப்பூர், 22. கோவை, 23. நீலகிரி, 24. திண்டுக்கல், 25. மதுரை, 26. ராமநாதபுரம், 27. தேனி, 28. சிவகங்கை, 29. விருதுநகர், 30. திருநெல்வேலி, 31. தூத்துக்குடி, 32. கன்னியாகுமரி, 33. கள்ளக்குறிச்சி, 34. தென்காசி, 35. செங்கல்பட்டு.

தமிழகத்தில் 33 மாவட்டங்கள் இருந்த நிலையில் 34-வது மாவட்டமாக தென்காசியும், 35-வது மாவட்டமாக செங்கல்பட்டும் உருவாகி உள்ளது. புதிய மாவட்டங்களின் எல்லையை வரையறை செய்ய தனி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு பணிகளை துவங்கி உள்ளனர்.

இப்போது தஞ்சாவூர் மாவட்டத்தை பிரித்து கும்பகோணத்தை தலைமையிடமாகக்கொண்டு ஒரு மாவட்டமும், கோவை மாவட்டத்தை பிரித்து பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டமும் உருவாக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது.

சிறிய மாவட்டங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. எனவே, புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

திருநெல்வேலி பெரிய மாவட்டமாக இருப்பதால் நிர்வாக வசதிக்காக இந்த மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்று கடந்த 08 ஜனவரி 2019  ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவித்தார். விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்டு தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தின் பரப்பளவு 7,200 சதுர கி.மீ.க்கு மேல். இது மாநிலத்தின் மிகப் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த முடிவு தர்க்க ரீதியாகவும் அரசின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காகவும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உதயமானது செங்கல்பட்டு மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தலைமையிடங்களாக கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் எனவும், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை புதிய மாவட்டங்களாகவும் அறிவிக்கப்படும் எனவும் கூறினார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை வருவாய் மாவட்ட மக்களின் மயிலாடுதுறையை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்பது நீண்டகால கோரிக்கை. ஆத்துார் மாவட்டமாக உருவாக ஆயத்தமாகிறது. இதில் கடைசியாக கடந்த 15ம் தேதி வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்து அறிவிக்கப்பட்ட பிறகு மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

புதிய மாவட்டம் உருவாக்க அடிப்படை விதிகள்
10, ஆகஸ்ட் 2016 அமைச்சர்  ஆர்.பி . உதயகுமார்  புதிய  மாவட்டத்தை  உருவாக்க 2500 சதுர  கிலோமீட்டர்  பரப்பளவு , 10  லட்சம்  முதல்  30  லட்சம்  மக்கள்  தொகையும் 200  கிராமங்கள் மற்றும் 2 கோட்டங்கள் அமைந்திருக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன என்று கூறினார். இவை பூர்த்தி செய்யப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர் கருத்துருவோடு பஞ்சாயத்துக்களின் தீர்மானமும் நிறைவேற்றியிருக்க வேண்டும்.  இவற்றோடு அந்த பரிந்துரை வந்தால் அரசு அதுபற்றி ஆய்வுசெய்து அறிவிக்கும்.  ஆனால் இவை பூர்த்தியாகாததால் புதிய மாவட்டங்களுக்கு சாத்தியமில்லை என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிவித்தார்.

வளர்ச்சி வேண்டுமே?
கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றுவர வேண்டும் என்றாலே பல கிராம மக்கள் ஒரு நாளை செலவிட வேண்டியுள்ளது.  தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் சராசரியாக 22 லட்சம் பேர் உள்ளனர்.

பொதுவாக பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் அதிகமாக உள்ள பெரிய மாவட்டங்களை நிர்வாக ரீதியான சிறப்பான செயல்பாடுகளுக்காக பிரிப்பது வழக்கம்.

புதிய மாவட்டம் உருவாக்கப்படும்போது, அதன் வளர்ச்சி திட்டங்கள், புதிய தொழில் மேம்பாடு உருவாக்கப்பட வேண்டும். அதன்படி திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. சிவகங்கையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கிய பிறகு அங்கு குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு வளர்ச்சியை அரசு உருவாக்கவில்லை. அடிக்கடி வறட்சியை சந்திக்கிறது. இதன்விளைவாக இங்குள்ள மக்கள் குடிபெயர்வதால், அந்த மாவட்டத்தில் மக்கள் தொகை மெல்ல சரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

60 மாவட்டங்களாக மாறினால் ? 
60 மாவட்டங்கள் என எண்ணிக்கை கூடினால், ஆட்சியர்கள் எண்ணிக்கைதான் 60 ஆகும். வேறு எந்த ஒரு மாற்றமும் நடக்காது. ஏன் எனில், அரசின் பெரும்பாலான துறைகளில் லட்சக்கணக்கில் காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்பி மக்கள் சேவையைத் துரிதப்படுத்த அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மக்கள் நல திட்டங்கள், அரசின் பிற சேவைகள் சென்றடைவதில் தேக்கம் ஏற்பட்டு அதுநீடிக்கும். ஆகையால் அதிக மாவட்டங்கள் பிரிக்கப்படும் சூழலில் காலி பணியிடங்களையும் நிரப்பினால்தான் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இ-சேவையாக்கப்பட்ட மாவட்ட நிர்வாகத்தின் பணிகள்
தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக அமைக்கப்பட்டுள்ள 151 இ-சேவை மையங்களை "சொத்து வரி, மின்கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களை செலுத்தவும் இப்பொது சேவை மையம் செயல்படுகிறது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள இ-சேவை மையங்களில் சொத்துவரி சாக்கடை வரி, செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இச்சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்கள் பெறவும், அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் அரசு அலுவலகங்களுக்கு நேரில் வந்து செல்ல வேண்டிய சிரமம் குறைக்கப்பட்டுள்ளது.

வருவாய் துறை சான்றிதழ்கள் – விண்ணப்ப நிலை
கீழ் கண்ட வருவாய்த்துறை சான்றிதழ்கள்
வருமான சான்றிதழ்
சாதி சான்றிதழ்
பிறப்பிட சான்றிதழ்
முதல் பட்டதாரி சான்றிதழ்
குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ்,
கணவனால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ் மற்றும்
சமூக நலத்திட்டங்கள்

மற்றும் இதர வருவாய்த்துறை சான்றிதழ்கள் தற்போதைய விண்ணப்ப நிலை அறிந்து கொள்ள

6-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

சான்றிதழ்களைப் பெறாத மாணவர்கள் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ்களை தங்களுக்கு அருகிலுள்ள அரசு பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

இ-சேவைகள் - நில ஆவணங்கள்
 நில உரிமை (பட்டா - புலப்படம் / சிட்டா / நகர நில அளவைப்  பதிவேடு) விவரங்களை பார்வையிட
 அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
  நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்களை சரிபார்க்க
  அரசு புறம்போக்கு நில விவரம் பார்வையிட

இ-சேவைகள் - போக்குவரத்து
இ-சேவைகள் - போக்குவரத்து : பல்வேறு ஆன்லைன் சேவைகள் விவரம்
ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு
கோரிக்கைப் பதிவு
கோரிக்கை நிலவரம்
நிர்வாக எல்லை அறிய
ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு
இன்றைய ஆரம்ப வாகன பதிவு எண்
வாகன எண் முன்பதிவு படிவம்

தேர்தல் ஆணையப்பணிகள்
வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் தேட

பொதுவிநியோக திட்ட சேவைகள்
o    மின்னணு அட்டை விண்ணப்பிக்க
o     மின்னணு அட்டை விவரங்கள் திருத்தம் செய்ய
o    மின்னணு அட்டை விவர மாற்றம் (பெயர், வயது உள்ளிட்ட)
o    மின்னணு அட்டை விவர மாற்ற நிலை
o    உறுப்பினரை சேர்க்க
o    முகவரி மாற்றம் செய்ய
o    குடும்ப உறுப்பினர் நீக்க
o    அட்டை ஒப்படைக்க / இரத்து செய்ய
o    அட்டை தொடர்பான சேவை நிலை அறிய

தமிழ்நாடு காவல் துறை – பொதுமக்கள் வலை தளம்
இணையதள சேவைகள்
தொலைந்துபோன ஆவண அறிக்கை
சாலை விபத்து ஆவண பதிவிறக்கம்
புகார் பதிவு செய்தல்
இணையவழி புகாரின் நிலை
முதல் தகவல் அறிக்கை நிலை
சமுதாய பதிவேடு நிலை
வாகனங்களின் நிலை
அடையாளம் காணா பிரேதங்கள்
கைதானவர்களின் விவரம் அறிய

பொதுமக்கள் குறை தீர்ப்பு சேவை
மனுக்கள் பரிசீலிக்கும் முனையம்/மின் மாவட்ட மனுக்கள் குறை தீர்ப்பு வலை தளம், அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் செயல் பாட்டில் உள்ளது. மாவட்ட ஆட்சியரக ஒத்துழைப்புடன், மனுக்களை வாங்குவது, பரிசீலிப்பது மற்றும் கண்காணித்தல் ஆகியவை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், தங்கள் மனுக்களை, மனுக்கள் பரிசீலிக்கும் முனையம்(PPP) வழியாக பதிவு செய்ய வேண்டும். முதல் கட்ட பரிசீலனைக்குப்பின், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மனுவும் சமர்ப்பிக்கப்படும் போதும் மற்றும் தீர்வின் போதும் மனுதாரர் ஒரு குறுந்தகவலைப் பெறுவார். 

வேலை வாய்ப்பு – பதிவு மற்றும் புதுப்பித்தல்
இந்த இணையதளம் வேலை வாய்ப்பு பதிவு, புதுப்பித்தல் மற்றும் கூடுதல் கல்வித் தகுதி போன்ற பணிகளை மேற்கொள்ள வழி வகை செய்வதுடன் இலட்சக்கணக்கான பதிவுதாரர்களின் விவரங்களை வேலையளிப்பவர்கள் பயன்படுத்த உள்ளதால் தொழில் நெறி காட்டுதல் வழியாக பணி நாடுபவர்கள் மற்றும் வேலையளிப்பவர்களை ஒருங்கிணைக்கும் பணியுடன், வேலை நிலவரத் தகவல் மற்றும் பகுப்பாய்வு மூலம் மனித வளத் திட்டமிடல், மனித சக்தி தேவை குறித்த பணியும் மேற்கொள்ளபடுகின்றது.

மின் நுகர்வு கட்டணத்தைச் செலுத்த இ-சேவை

ஆதார் இணைய சேவைகள்
ஆதார் பதிவு
ஆதார் நிலை சரிபார்க்க
ஆதார் பதிவிறக்கம்
ஆதார் விவரங்களை புதுப்பித்தல்
புதுப்பித்த விண்ணப்ப நிலையை சரிபார்க்க
ஆதார் எண்/ மின்னஞ்சல்/ கைப்பேசி எண் சரிபார்ப்பு
உடற்கூறு பதிவுகளை மூடுதல்/ திறத்தல்
ஆதார் – வங்கி கணக்கு இணைத்தல் நிலையை சரிபார்க்க

ஆதார் அங்கீகார வரலாறு
மெய்நிகர் ID (VID) உருவாக்குதல்
இவ்வளவு சேவைகளை கண்காணித்து ஒரு மாவட்ட நிர்வாகத்தால் செய்ய இயலும்.

ஏன் இந்த அவசரம் ?
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களை மறுவரையறை செய்து 12 லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு மாவட்டம் வீதம் மொத்தம் 60 மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சரிதான் ஏற்கனவே 4 லட்சம் கோடி கடன் அரசுக்கு இருப்பதைப்பற்றி கவலை இல்லையா. மாவட்டத்தைக் கட்டமைக்க ஆகும் ஆயிரக்கணக்கான கோடி நிதி எப்படி மீண்டும் கடன் வாங்குவதா?

பலவகை படிப்பு பயிற்சிக்குப் பிறகே பணியமர்த்தப்படும் மாவட்ட ஆட்சியர்களால் ஒரு மாவட்டத்தை நிர்வகிக்க முடியாது என்றால் ஒரு அமைச்சரால் அத்தனை மாவட்டங்களையும் எப்படி ஒரே அளவில் நிர்வகிக்க முடியும் என்ற கேள்வி எழும் அல்லவா?

அவசரம் பதற்றமாக அறிவிப்பு நிர்வாகத் திறமையின்மையே ஒழிய நீர்வாகச் சீர்திருத்தம் என்று சொல்லமுடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT