அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 
சிறப்புக் கட்டுரைகள்

பதவிநீக்கத் தீர்மானம்: டிரம்ப் தப்புவாரா? 

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானங்கள் கொண்டு வந்து பிரதிநிதிகள் அவை, செனட் அவை இரண்டிலும் வெற்றி பெற்றால், அதிபராக

ஆர். வெங்கடேசன்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானங்கள் கொண்டு வந்து பிரதிநிதிகள் அவை, செனட் அவை இரண்டிலும் வெற்றி பெற்றால், அதிபராக இருப்பவர் பதவியை இழக்க வேண்டியிருக்கும் என்பது சட்டம். 

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையால் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரிலான பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க வரலாற்றிலேயே பதவி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ளும் அதிபர்கள் வரிசையில் மூன்றாவது நபர் டிரம்ப். 

டிரம்ப் மீதான முதன்மையான 2 குற்றச்சாட்டுகள் என்ன? அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டு முதலில் எழுந்தது.  
*  முதல் குற்றச்சாட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்தது. 
* அரசியல் போட்டியாளரான ஜனநாயகக் கட்சி சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் ஜோ பிடனை பழிவாங்க உக்ரைனுக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்ததுதான், மொத்த விசாரணைக்கும் காரணம்.  இது மட்டுமின்றி மேலும் சில புகார்களும் விசாரணைக்குக் காரணமாக அமைந்துள்ளது.  

அதாவது டிரம்ப் ரஷியாவுடன் சேர்ந்து, மோசடி செய்து அதிபராக ஆனார். சட்டங்களைத் தனக்கு வசதியாக வளைத்துக்கொண்டு, தனக்கு வேண்டியதை டிரம்ப் செய்துகொள்கிறார். அதிபர் தேர்தலின்போது ரஷியா, டிரம்பிற்காக நிறைய முறைகேடுகளைச் செய்தது,  ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டிய அடிப்படைச் சம்பள விதிகளை மீறியது, வெளிநாட்டு ஒப்பந்தங்களை மீறி நடந்து கொள்வது, வெளிநாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று கூறி,  போர்ப் பதற்றத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட அடுக்கடுக்கான புகார்கள் டிரம்ப் மீது வைக்கப்படுகின்றன. 

பதவிநீக்கத் தீர்மானம்: இதையடுத்து அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசண்டேட்டிவ்ஸ் என்று அழைக்கப்படும் பிரதிநிதிகள் அவையின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. 

பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்படுவது எப்படி? அமெரிக்க அரசியலமைப்பின்படி, பெரிய குற்றங்களில் ஈடுபட்டால் அதிபராக இருப்பவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். இது சட்டரீதியான நடைமுறையல்ல. அரசியல் நடைமுறை என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

அதாவது, அதிபர் பதவி நீக்கத்திற்கான முதல் நிகழ்வாக, அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் கொண்டுவரப்படும். இந்த அவையில் உறுப்பினர்கள் , குற்றச்சாட்டுக்கு ஆதரவாகவோ, எதிர்த்தோ வாக்களிக்க வேண்டும்.  முதல் கட்டமாக இந்த அவையில் குற்றச்சாட்டுக்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அதிபருக்கு எதிராக வாக்களித்தால், அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.

இதன்படி, ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையாகவுள்ள இந்த அவையில், இன்று வியாழக்கிழமை (டிச.19. 2019)  அமெரிக்க பிரதிநிதிகள் அவையில், டிரம்பை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்தின் மீதான வாக்களிப்பு நடைபெற்றது. பிரதிநிதிகள் அவையில் வாக்களிக்கத் தகுதிபெற்ற 435 உறுப்பினர்களில், தீர்மானத்திற்கு ஆதரவாக 227 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனால் டிரம்ப்பின் பதவி நீக்கத் தீர்மானம் பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியது. டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 197 உறுப்பினர்களே உள்ளனர். தீர்மானத்திற்கு எதிராக 179 பேர் வாக்களித்தனர். 

அமெரிக்க நாடாளுமன்றத்தின் சுமாா் 250 ஆண்டு கால வரலாற்றில், அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவர் மீது இப்படியொரு பதவி நீக்க நடவடிக்கையை மக்கள் கண்டதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

செனட் அவையில் நிறைவேறுமா?: இதையடுத்து அடுத்த மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இன்னோர் அவையான செனட் அவையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். 

100 இடங்களைக் கொண்ட  செனட் அவையில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 47 உறுப்பினர்களும் உள்ளனர். அங்கு டிரம்பைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் 66 செனட் உறுப்பினர்களின் ஆதரவு தேவை . ஆனால் குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் செல்வாக்கில் செனட் உள்ளதால், அவருக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் வெற்றி பெறுமா? பெறாதா? டிரம்ப்பின் அதிபர் பதவி தப்புமா? என்பது கேள்விக்குறி. டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் மீது செனட் அவையில் விசாரிக்கப்பட்டு, நடத்தப்படும் வாக்கெடுப்பில் டிரம்ப் தோல்வி அடைந்தால் அதிபர் பதவியை  இழக்க நேரிடும்.

மூன்றாவது அமெரிக்க அதிபர் டிரம்ப்:  வரலாற்றில் இதுவரை அமெரிக்க அதிபர்களில் இரண்டு பேர் மீது இதுபோன்ற பதவி நீக்கக் குற்றச்சாட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது மூன்றாவது அதிபராக டிரம்ப் மீது குற்றச்சாட்டுகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

1868 ஆம் ஆண்டு அதிபர் ஆண்ட்ரு ஜான்சன் மீதும்,  1998 ஆம் ஆண்டு பில் கிளின்டனுக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் பதவிநீக்க நடவடிக்கைக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஆனால், இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலுமே பிரதிநிதிகள் அவை மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், செனட் அவை தீர்மானத்துக்கு ஆதரவாக இல்லாததால் அவர்கள் பதவியிலிருந்து விலக வேண்டிய சூழலுக்கு த் தள்ளப்படவில்லை. இந்தநிலையில் தற்போது பதவி நீக்க நடவடிக்கையை  அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்கொண்டுள்ளார். 

ரிச்சர்ட் நிக்சன் : அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்சன், வாட்டர் கேட் மோசடிக்கு எதிராக தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்காக பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு இருப்பதை அறிந்து, தாமாகவே 1974 ஆம் ஆண்டு அதிபர் பதவியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

தனக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானங்களைக் கொண்டுவர வேண்டாம் என்று வலியுறுத்தி, கீழவைத் தலைவா் நான்சி பெலோசிக்கு அதிபா் டொனால்ட் டிரம்ப் எழுதியுள்ள கடிதத்தில், இந்த நடைமுறையைத் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட சதி என்றும் பழிவாங்கல் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

எநத் வகையிலும் செல்லுபடியாகாத இந்தப் பதவி நீக்க நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம், பதவிப் பிரமாணத்தின்போது நீங்கள் அளித்த உறுதிமொழியை மீறுகிறீா்கள்; அரசியல் சாசனத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறிய வாக்குறுதியைக் கைவிடுகிறீா்கள்; மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு எதிராக, பகிரங்கப் போா் தொடுக்கிறீா்கள் என்று அந்த கடிதத்தில் டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டியிட டிரம்ப் முடிவு செய்துள்ளாா். அவரை எதிா்த்து, ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் அதிபா் ஜோ பிடன் போட்டியிடுவாா் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது. 

பிரதிநிதிகள் அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைப் போல செனட் அவையில் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால், பதவி நீக்கத் தீர்மானங்கள் தோற்கடிக்கப்பட்டு, டிரம்ப்  அதிபர் பதவி காப்பாற்றப்படும் என்பதே பெரும்பாலான அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT