சிறப்புக் கட்டுரைகள்

போர்க் கப்பலில் லட்சத்தீவுக்கு சுற்றுலா சென்றாரா ராஜீவ்: இதோ பிரத்யேக தகவல் (புகைப்படங்கள்)

தினமணி


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தனது சொந்த டாக்ஸியைப் போல ஐஎன்எஸ் விராட் போர் விமானத்தைப் பயன்படுத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

இது உண்மையில்லை என்று காங்கிரஸ் கட்சியினரும், உண்மையே புள்ளிவிவரங்கள் இருக்கின்றன என்று பாஜகவினரும் தத்தமது வாதங்களை முன் வைக்கிறார்கள்.

1988ம் ஆண்டு புத்தாண்டைக் கொண்டாட அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, தனது மனைவி மற்றும் குடும்பம், நண்பர்களுடன் லட்சத் தீவுகளுக்கு சுற்றுலா சென்ற செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் விரவான செய்திகளாகவும், கட்டுரைகளாகவும் பிரசுரித்திருந்தது.

அதை தற்போது தூசு தட்டியபோது நமக்கு சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

தேதியோடு செய்தி வெளியான நாளிதழின் புகைப்படத்தோடு உங்களுக்காக தொகுத்துள்ளோம். இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல. 1988ம் ஆண்டுகளில் பிரதமரின் சுற்றுலா பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட சுவாரஸ்யமான செய்தியை நாளிதழின் புகைப்படத்தோடு படிக்கும் போது வாசகர்களுக்கு ஏற்படும் ஆச்சரியம் கலந்த அதிய உணர்வுக்காகவே இந்த பதிவு.

ராஜீவ் விடுமுறையைக் கழிக்கவிருக்கும் பரேன் தீவு
டிசம்பர் 16,1987

பிரதமர் ராஜீவ் காந்தி இந்த ஆண்டின் இறுதி நாட்களை லட்சத்தீவுகளில் ஒன்றான பரேன் தீவில் கழிக்க உள்ளார்.

பிரதமரின் பயணத்தை முன்னிட்டு பாதுகாவலர்கள், காங்கிரஸ் தலைவர்கள் என பலரும் அவருக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பணியில் மும்முரமாக உள்ளனர். நவீன வசதிகளுடன் கூடாரங்கள் அமைக்கும் பணியும் நடக்கிறது. இதற்காக ஏராளமான சமையல் பணியாளர்கள், மளிகை, தண்ணீர் என கப்பல்களில் வந்து இறங்குகிறது.

பிரதமருக்காக முன்பதிவு செய்யப்பட்ட தீவுகள்
டிசம்பர் 28,1987


லட்சத்தீவுகள் கூட்டத்தை பிரதமர் ராஜீவ் காந்திக்காக முன்பதிவு செய்துவிட்டனர். அவரது சுற்றுப் பயணம் முடியும் வரை வேறு யாரும் இந்த தீவுக்கு வர இயலாது. அனைத்து போக்குவரத்து சேவைகளும், ராஜீவுடன் வருவோருக்கும், அவரை சந்திக்க வரும் அமைச்சர்களுக்காகவும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது.

விமானத்தில் வரவழைக்கப்பட்ட அம்பலப்பழா பால்பாயாசம்
டிசம்பர் 29,1987

தீவுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்க அம்பலப்பழா பால்பாயாசம் (கேரளாவின் உணவு) விமானம் மூலம் அதிக அளவில் தீவுக்குக் கொண்டு வரப்பட்டது.

பிரதமரின் சிறப்பான விருந்து திட்டம்

பங்காராம் தீவு.. இதைத்தான் பிரதமர் ராஜீவ் காந்தி தனது விருந்து நிகழ்ச்சிக்கு தேர்வு செய்திருந்தார். ஏன் என்றால் இங்கு மட்டுமே மதுபானங்கள் அருந்த அனுமதி இருந்தது. 

மற்ற அனைத்து தீவுகளிலும் மதுபானங்களுக்கு தடை இருந்தது. மற்ற தீவுகளில் இருப்போர் மதுபானம் அருந்த வேண்டும் என்றால் கப்பலில் மட்டுமே அருந்தலாம். 

இதன் மூலம் பிரதமர் எந்தவிதமான புத்தாண்டு விருந்தை அளிக்க திட்டமிட்டிருக்கிறார் என்பது நன்கு புரியும்.

அந்த விடுமுறை இப்படித்தான் அமைந்தது

இந்த புத்தாண்டு விருந்தில் வெளிநாட்டைச் சேர்ந்த 8 விருந்தினர்கள் பங்கேற்றனர். 

1200 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 24 மணி நேரமும் கப்பற்படையினர் கண்காணிப்பில் அந்த தீவு இருந்தது. இதுபோன்ற பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஐஎன்எஸ் விராட், ஐஎன்எஸ் விந்தியகிரி, ஐஎன்எஸ் தாராகிரி உள்ளிட்ட போர்க்கப்பல்கள் பலவும் ஈடுபடுத்தப்பட்டன.

விருந்தில் பங்கேற்ற விவிஐபி பட்டியல்
ஜனவரி 24,1988

ராஜீவ் காந்தி ஏற்பாடு செய்த புத்தாண்டு விருந்தில்  அவரது மனைவி சோனியா, அவர்களது இரண்டு பிள்ளைகள், அஜிதாப் பச்சானின் மூன்று மகள்கள், அமிதாப் பச்சான், அவரது மனைவி ஜெயா, அவர்களது பிள்ளைகள் ஸ்வேதா மற்றும் அபிஷேக், சோனியாவின் தாய், அவரது சகோதரி, அவரது பிள்ளைகள், சோனியாவின் ஜெர்மன் தோழி என ஏராளமானோர் இந்த விருந்தில் பங்கேற்றனர்.

இப்படி ஒவ்வொரு நாளும் ராஜீவ் காந்தியின் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்த சிறப்புச் செய்திகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT