முகப்பு
தலையங்கம்

முட்டுக்கட்டை அகலவில்லை!

மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக நடைபெற்ற இலங்கை

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:38 PM
பகிர்:

மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக நடைபெற்ற இலங்கை இந்திய வெளியுறவுத் துறை, வேளாண் துறை அமைச்சர்கள்
பங்கேற்ற கூட்டத்தில் கூட்டுப்பணிக்குழுவை ஏற்படுத்துவது என்று முடிவு காணப்பட்டுள்ளது. இந்தக் குழு, மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் குறிப்பிட்டிருப்பதைப்போல, இலங்கை கடற்
படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் படகுகளை மீட்பது தொடர்பான விவகாரங்களையும் கவனிப்பதற்காகத்தான். இந்தக் குழுவும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறைதான் கூடி விவாதிக்கும்.
ஆகவே இந்தக் குழு அன்றாடம் எழும் சிக்கல்களைத் தீர்க்க எந்த வகையில் உதவும் என்பதோ, அல்லது மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் இந்தக் குழு உடனடியாகத் தலையிட்டு விடுவிக்கும் என்பதோ உறுதிப்படுத்தப்படாத நிலையில், இந்தக் குழு அமைக்கப்படுவதை ஒரு வெற்றியாகவோ நல்ல முடிவாகவோ கருத இயலவில்லை.
பாக். ஜலசந்தியைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் அவர்தம் பகுதியில் அமைதியான முறையில் வாழ்வாதாரத்துக்கான வருவாயை ஈட்டும் வகையில் தமிழகம் மற்றும் புதுவை அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், இந்த மீனவர்கள் படிப்படியாக இழுவை வலை (ஆஞபபஞங பதஅரகஐசஎ) மீன்பிடி முறையை கைவிடுவதற்கான சில நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்றும் இந்தக் கூட்டத்தில், இலங்கை அரசுக்கு சொல்லப்பட்டுள்ளது.
மத்திய அரசு அனுமதி அளித்துள்ள முகையூர் மீன்பிடித் துறை
முகக் கட்டுமானம், மற்றும் ராமேஸ்வரம் எண்ணூர் மீன்பிடித் துறைமுகங்கள் ஆகியவை நடைமுறைக்கு வரும்போது தமிழக மீனவர்
களின் பிரச்னைகளைத் தீர்க்க உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களுக்கான புதிய திட்டத்தை அமல்படுத்தவுள்ளதாகவும், அதற்கான நடைமுறைகளை ஆலோசித்து வருவதாகவும் இலங்கை அரசிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம், தமிழக கடலோர பாரம்பரிய மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடிக்க (ஈஉஉட நஉஅ ஊஐநஏஐசஎ) வகை செய்வதுதான். அதாவது, இலங்கையின் பிரச்னைக்குரிய பாக். ஜலசந்தி பக்கம் போகாமல் மீனவர்களை வேறு திசையில் சென்று மீன் பிடிக்கச் செய்வதே இதன் அடிப்படை நோக்கம்.
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிறபோது, இலங்கைப் படை எத்தகைய அமைதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும், மீனவர்களை உடனடியாக கடல்பரப்பிலேயே விசாரித்து விடுதலை செய்ய அல்லது படகுகளை விடுவிக்க வகை செய்யும் ஏற்பாடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்பதும் தெளிவு.
இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையிலான மிகப்பெரும் பிரச்னை வெறும் மடிவலை மட்டுமல்ல. அவர்கள் எல்லை தாண்டவே கூடாது என்பதும், பாக். ஜலசந்தியில் எத்தனை நாட்களுக்கு தமிழக மீனவர்களை மீன் பிடிக்க அனுமதிக்கலாம் என்கிற கால அளவை நிர்ணயிப்பதும்தான். இத்தகைய அடிப்படையான விவாதங்களை எடுத்துக்கொள்ளாமல், கூட்டுப் பணிக் குழு அமைக்க முடிவு செய்திருப்பது தமிழக மீனவர்களுக்கு எந்த நன்மையும் அளிக்காது.
இரு நாடுகளின் மீனவர் அமைப்புகள் சார்பில் முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, ஆண்டுக்கு 83 நாட்கள் தமிழக மீனவர்கள் பாக். ஜலசந்தியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் இலங்கை மீனவர்கள் (அவர்களும் தமிழர்கள்தான்) ஒரு நிமிடம்கூட எங்கள் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று வெளிப்படையாகத் தெரிவித்தனர்.
மூன்று ஆண்டு கால அவகாசத்தில் இழுவலைகளை முற்றிலுமாக இல்லாமல் செய்துவிடுவோம் என்று இந்திய மீனவர்கள் கூறிய உறுதிமொழியை இலங்கை மீனவர்கள் ஏற்கவில்லை. இந்த விவகாரத்தில் இலங்கை மீனவர்கள் இவ்வளவு கறாராக நடந்துகொள்ள வேண்டுமா? பிரச்னைகளை படிப்படியாகத் தீர்த்துக்கொள்ள இயலாதா? தொப்புள்கொடி உறவு, தமிழின உணர்வு என்பதெல்லாம் தாங்கள் பாதிக்கப்படாமல் இருந்தால் மட்டும்தானா?
கடந்த 30 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரினால் எங்களால் மீன்பிடித் தொழில் செய்ய முடியவில்லை. இப்போதுதான் மீன்பிடிக்க வருகிறோம். எங்களிடம் எந்த சலுகையும் கேட்காதீர்கள் என்பது இலங்கை மீனவர்கள் இந்தக் கூட்டத்தில் முன்வைத்த வாதம்.
தற்போது மத்திய அரசு குறிப்பிட்டுள்ளபடி, புதிய திட்டம் அமலுக்கு வரும்போது, இந்திய கடலோர பாரம்பரிய மீனவர்கள் ஆழ்கடல் சென்று மீன்பிடிக்க அறிவுறுத்தப்படுவார்கள் என்பது உறுதி. இவர்களை ஆழ்கடல் நோக்கிச் செல்வதற்கான திறன்மிகு படகுகள், புவிநிலை அறியும் கருவிகள், மானியங்கள் என பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் நடவடிக்கை
களைக் குறைக்கவும், படகு பறிமுதல்களைத் தடுக்கவும் இத்தகைய நடவடிக்கையே உகந்தது என்று மத்திய அரசு கருதுவதாகத் தெரிகிறது.
தற்போதைக்கு, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, கூட்டுப் பணிக்குழு விடுவிக்கும் என்பது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வேறு எந்தவொரு கோரிக்கையும் ஏற்கப்படவும் இல்லை, இருதரப்புக்கும் இடையேயான முட்டுக்கட்டை அகற்றப்படவும் இல்லை. மீன்பிடி உரிமைகள் நிலை நாட்டப்படவில்லை.
மொத்தத்தில் மீனவர் பிரச்னை இன்னும் கரை சேர்ந்த பாடில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.