முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் தெருநாய் தாக்கியதில் கண்ணை இழந்த 4 வயது சிறுவன்!

தெலங்கானாவில் தெருநாய் தாக்கியதில் 4 வயது சிறுவன் கண்ணை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 மார்ச் 2026, 7:46 pm IST
தெருநாய்கள் (கோப்புப் படம்)
பகிர்:

தெலங்கானாவில் தெருநாய் தாக்கியதில் 4 வயது சிறுவன் கண்ணை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், புவனகிரி நகரில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே அந்த சிறுவன் வியாழக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தெருநாய் தாக்கியதில் சிறுவனின் ஒரு கண் கருவிழி பெயர்ந்து தரையில் விழுந்தது.

உடனே அச்சிறுவன் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.

Advertisement

Advertisement

தற்போது சிறுவன் நலமுடன் இருப்பதாகவும், அவனது மற்றொரு கண் பாதிக்கப்படவில்லை என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு காங்கிரஸ் எம்.பி. கிரண் குமார் ரெட்டி உத்தரவிட்டார்.

சிறுவனின் தந்தையிடமும் பேசி, சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்கும் என்று உறுதியளித்தார். சிறுவன் ஹைதராபாத்தில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறான் என்று கிரண் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளையும் அவர் கேட்டுக்கொண்டார்.

summary

In a shocking incident, a four-year-old boy lost his eye after a stray dog attacked him in Yadadri Bhuvanagiri district of Telangana, police said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.